சென்னைக்கு அருகில் கோடை வெயிலை தணிக்க டாப் 5 நீர்வீழ்ச்சிகள்


Raja Balaji
03-05-2025, 13:45 IST
gbsfwqac.top

தடா நீர்வீழ்ச்சி

    சென்னையில் இருந்து 90 கி.மீ தொலைவில் தடா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. உப்பலமடுகு என்றும் தடா நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகிறது. ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் குளிக்கும் போது சொர்க்கத்தில் இருப்பது போல உணர்வீர்கள்.

ஆரே நீர்வீழ்ச்சி

    சென்னையில் இருந்து 89 கி.மீ தொலைவில் ஆரே நீர்வீழ்ச்சி உள்ளது. காலை 8 மணியில் இருந்து குளிக்க அனுமதி உண்டு. இங்கு மொத்தம் 5 நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

சதாசிவ கோனா நீர்வீழ்ச்சி

    சென்னையில் இருந்து 106 கி.மீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு அம்மாவாரி, அய்யாவாரி என இரு நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

கைலாசா கோனா நீர்வீழ்ச்சி

    சென்னையில் இருந்து 92 கி.மீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஒரு நீர்வீழ்ச்சியில் 40 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும்.

மூல கோண நீர்வீழ்ச்சி

    சென்னையில் இருந்து 110 கி.மீ தூரம் திருவள்ளூர் - புத்தூர் வழியாக சென்றடைந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம்.

    இந்த நீர்வீழ்ச்சிகளில் உடை மாற்றும் அறைகள் கிடையாது. எனவே பெண்கள் செல்வதாக இருந்தால் திட்டமிட்டு கொள்ளவும். செல்லும் வழியில் குரங்குகளின் அட்டகாசம் இருக்கும். கவனமாக இருங்கள்.