ஊட்டி போக திட்டமா? கோடை விழாவின் இந்த தேதிகளை நோட் பண்ணுங்க
Alagar Raj AP
14-04-2025, 14:57 IST
gbsfwqac.top
ஊட்டி கோடை விழா 2025
மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை வெப்பத்தை தணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருவது வழக்கம். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவர தமிழக அரசால் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஊட்டி கோடை விழா மே 3ஆம் தேதி துவங்குகிறது.
காய்கறி கண்காட்சி
மே 3 மற்றும் 4ஆம் தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது. இங்கு காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட யானை, மயில், கிளி, சேவல், பான்டா கரடி, வரிக்குதிரை, மீன் போன்ற உருவங்கள் காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
நறுமண பொருட்கள் கண்காட்சி
கூடலூரில் மே 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் 11வது நறுமண பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது.
ரோஜா கண்காட்சி
மே 10 முதல் மே 12 வரை இரண்டு நாட்களுக்கு ஊட்டி ரோஜா பூங்காவில் 20 வது ரோஜா கண்காட்சி நடக்கிறது. இதற்காக பூங்காவில் உள்ள 4 ஆயிரத்து 201 ரோஜா ரகங்கள் கொண்ட, 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சி
கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி மே 16 முதல் மே 21 வரை 6 நாட்களுக்கு தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது. இவ்வாண்டு சிறப்பு அம்சமாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு போன்ற பல்வேறு நாடுகளின் மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
பழக் கண்காட்சி
மே 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சிம்ஸ் பூங்காவில் 65வது பழக் கண்காட்சி நடைபெற உள்ளது
மலைப்பயிர்கள் கண்காட்சி
குன்னூர் காட்டேரி பூங்காவில் இந்த வருடம் முதல் முறையாக மலைப்பயிர்கள் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இந்த கண்காட்சி மே 30 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.