ஹைதராபாத்திலிருந்து 200 கீ.மீ.க்குள் பார்க்க வேண்டிய அழகான இடங்கள்
Alagar Raj AP
28-04-2025, 18:51 IST
gbsfwqac.top
ஹைதராபாத்
ஹைதராபாத்தின் பரபரப்பான சூழலில் இருந்து விலகி புத்துணர்ச்சியூட்டும் அமைதியான சூழலை அனுபவிக்க விருப்பமா? ஹைதராபாத்திலிருந்து 200 கி.மீ.க்குள் ஒரு நாள் சென்று வரக்கூடிய அழகான இடங்களை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
அனந்தகிரி மலை
அனந்தகிரி மலை இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கமாகும். இங்கு பழங்கால கோவில்கள், பழைய கட்டமைப்புகள் மற்றும் இடைக்கால குகைகள் உள்ளன. ஹைதராபாத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் இந்த மலை உள்ளது.
சிங்கூர் அணை
பசுமையான சுற்றுப்புறங்கள் மற்றும் பிரண்டமான பொறியியல் கட்டமைப்பை காண சிங்கூர் அணை சரியான இடமாக இருக்கும். இந்த அணை ஹைதராபாத்திலிருந்து 95 கி.மீ. தொலைவில் உள்ளது.
தோமகொண்டா கோட்டை
கட்டிடக்கலை மற்றும் கலைத்திறன் மிக்க இந்த கம்பீரமான தோமகொண்டா கோட்டை ஹைதராபாத்திலிருந்து வடக்கே 110 95 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கோயில்கொண்டா கோட்டை
மலையின் உச்சியில் அமைந்துள்ள கோயில்கொண்டா கோட்டை இன்னும் பலரால் அறியப்படாத சுற்றுலா தலமாக உள்ளது. சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற இடமான இது ஹைதராபாத்திலிருந்து 125 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
திண்டி நீர்த்தேக்கம்
அதிகாலை அல்லது மாலை நேரத்தில் சென்று இயற்கையின் ரம்மியமான காட்சியை அனுபவிக்க ஏற்ற இடமான திண்டி நீர்த்தேக்கம் ஹைதராபாத்திலிருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ளது.
எத்திப்போத்தலா நீர்வீழ்ச்சி
எத்திப்போத்தலா நீர்வீழ்ச்சி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 70 அடி உயரம் கொண்ட இந்த அழகிய அருவி கிருஷ்ணா நதியின் துணை நதியான சந்திரவங்க நதியால் உருவாகிறது. எத்திப்போத்தலா நீர்வீழ்ச்சி ஹைதராபாத்திலிருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ளது.
மல்லேல தீர்த்தம் அருவி
கிருஷ்ணா நதி பாயும் அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த அருவியை அடைய சுமார் 350 படிகள் ஏற வேண்டும். மழைக்காலத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வரும் இந்த மல்லேல தீர்த்தம் அருவி ஹைதராபாத்திலிருந்து 173 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.