தென்னிந்தியாவின் 7 மர்மமான இந்து கோவில்கள்


Alagar Raj AP
01-04-2025, 20:38 IST
gbsfwqac.top

வீரபத்திரர் கோவில்

    ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்துள்ள வீரபத்திரர் கோவில் பல டன் எடை உள்ள ஒரு தூண் மட்டும் தொங்கி கொண்டு இருக்கும்.

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில்

    கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ஓர் அறையில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பொக்கிஷங்களை எடுக்க முயற்சிப்பவர்களுக்கு மரணம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

ஏழுமலையான் கோவில்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவராக இருக்கும் வெங்கடேஸ்வரா திருவுருவச் சிலையின் மீது காதை வைத்தால் பெரும் கடலின் அலை ஓசை கேட்குமாம்.

தஞ்சை பெரிய கோவில்

    வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு முதன்முதலில் வந்தவர் வாஸ்கோடகாமா என்று வரலாறு கூறுகிறது. இவர் 1498 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளாவுக்கு வந்தார். ஆனால் 1003க்கும் 1010 ஆம் ஆண்டிற்கும் இடையில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பத்தில் பிரெஞ்சு அரசர் ராபர்ட் மற்றும் ஒரு சீன மனிதனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சன்னபட்னா நாய் கோவில்

    கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோவிலில் எகிப்தியர்களின் தெய்வமாக கருதப்படும் நாய்களை மக்கள் தேவியமாக வழிபடுகின்றனர்.

சாயா சோமேஸ்வரர் கோவில்

    தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சாயா சோமேஸ்வரர் கோவிலில் உள்ள ஒரு சிவலிங்கம் மீது தினமும் ஒரு நிழல் தோன்றும் என்றும் ஆனால் அந்த நிழல் எதன் நிழல் என்பது இன்னும் மர்மமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோவில்

    தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் தான் சிவபெருமான் சிரித்தபடி இருக்கும் விக்கிரகத்தை காண முடியும்.