tomato face pack: முகத்தில் தக்காளி தடவுவதால் இவ்வளவு பளபளப்பை பெற முடிகிறதா!!!


Balakarthik Balasubramaniyan
06-12-2022, 17:12 IST
gbsfwqac.top

    அன்றாட சமையலில் சுவைக்காகப் பயன்படுத்தப்படும் தக்காளி, சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது. தக்காளியை முகத்தில் தடவுவதால் உங்கள் முகப்பொலிவு அதிகரிக்கும். இதை பயன்படுத்தும் முறைக் குறித்து இப்போது பார்க்கலாம்.

Image Credit : freepik

நிபுணர் கருத்து

    சருமத்தில் தக்காளி பயன்படுத்துவது குறித்து அழகுக்குறிப்பு நிபுணர் பூனம் சுக் அவர்களின் கருத்தைத் தெரிந்து கொள்வோம். தக்காளியில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது உங்களுடைய கரும்புள்ளிகளை குறைத்து, முகப்பொலிவை அதிகரிக்க உதவுகிறது.

Image Credit : freepik

தக்காளி மற்றும் தேன்

    இவை இரண்டுமே சருமத்துக்கு மிகவும் நல்லது. இவற்றைப் பயன்படுத்தும்போது முகம் பொலிவுடன் இருக்கும். மேலும் சருமத்தில் உள்ள துளைகளைத் திறந்து, அவற்றைச் சுத்தப்படுத்துகிறது.

Image Credit : freepik

தக்காளி ஃபேஸ் பேக்

    தேன் மற்றும் தக்காளி சாறு கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். இதை முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம். வாரத்துக்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.

Image Credit : freepik

தக்காளி மற்றும் ரோஸ் வாட்டர்

    ரோஸ் வாட்டர், முகத்துக்கு மிகவும் நல்லது. தக்காளியில் வைட்டமின் C உள்ளது. இவை இரண்டையும் நாம் பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

Image Credit : freepik

தக்காளி டோனர்

    தக்காளியை விதை நீக்கி எடுத்துக்கொள்ளவும். அதன் சாறினை பிழிந்து ரோஸ் வாட்டருடன் கலந்துக்கொள்ளவும். இதனை நீங்கள் பேஷியல் டோனராகப் பயன்படுத்தலாம். தினமும் இரவில் தூங்கும்போது தடவவும்.

Image Credit : freepik

தக்காளி தோல் மற்றும் சர்க்கரை

    இந்த ஸ்கிரப் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்த உதவும். இறந்த சரும செல்கள் வெளியேறும். மேலும் அந்த இடத்தில் புதிய செல்கள் உருவாகும். இதை பயன்படுத்துவதன் மூலம் புள்ளிகள் குறைந்து முகம் பொலிவு பெறும்.

Image Credit : freepik

தக்காளி ஸ்கிரப்

    தக்காளி தோலுடன் சர்க்கரை சேர்த்து உங்கள் முகத்தில் கைகளைக் கொண்டு மென்மையாகத் தேய்க்கவும். இதனை வேகமாக செய்யக் கூடாது.இதற்கு பின் ஒரு பேஸ் பேக் பயன்படுத்துவதை உறுதிசெய்துக்கொள்ளவும். இல்லையெனில், சருமத்தில் உள்ள துளைகள் திறந்து, பருக்கள் வரத் தொடங்கும்.

Image Credit : freepik

கவனிக்க வேண்டியவை

    உங்கள் சருமம் உணர்திறன் வாய்ந்ததாக இருந்தால், தோல் மருத்துவ நிபுணர் ஆலோசனை பெற்று அதன் பின்னரே தக்காளியை சருமத்தில் பயன்படுத்த வேண்டும். இது போன்ற சூழலில் மிகுந்த கவனம் தேவை.

Image Credit : freepik

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik