முகத்திற்கு பல நன்மைகளை அள்ளி தரும் வாழைப்பழம்!!


Sreeja Kumar
14-12-2022, 13:54 IST
gbsfwqac.top

குளிர்காலத்திற்கு வாழைப்பழம்

    குளிர்காலத்தில் சருமம் பொலிவிழந்து வறண்டு காணப்படும். இது இந்த சீசனில் பெண்கள் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையே. எனவே, குளிர்காலத்தில் முகத்தை ஈரப்பதத்துடன் பொலிவாக வைத்திருக்க வாழைப்பழ ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். இதனை தயாரிக்கும் முறையை இங்கு பகிர்கிறோம்.

Image Credit : freepik

சருமம் பளபளக்கும்

    பளபளக்கும், ஈரப்பதமிக்க சருமத்தை பெற, பாதி பழுத்த வாழைப்பழத்தை எடுத்து, அதை நன்கு மசித்து கொள்ளவும். பின்பு 1 டீஸ்பூன் சுத்தமான தேன் சேர்த்து, நன்கு கலந்து முகத்தில் தடவவும். இதை 15-20 நிமிடங்கள் வைத்திருந்து நார்மல் வாட்டரில் அலசவும்.

Image Credit : freepik

பருக்களை நீக்கும்

    முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க, பாதி பழுத்த வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதில் 1 டீஸ்பூன் அரைத்த வேப்பிலை அல்லது வேப்பிலை பவுடர், ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும். இப்படியே 15 நிமிடங்களுக்கு வைத்திருந்து, நார்மல் வாட்டரில் முகத்தை அலசவும்.

Image Credit : freepik

சருமம் பொலிவுபெறும்

    சருமத்திற்கு பொலிவான தோற்றத்தை தர, பாதி பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 2-3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி, பின்பு அலசவும். இதனால் சருமம் சுத்தமாகி பொலிவான தோற்றத்தைப் பெறும்.

Image Credit : freepik

முகம் ஜொலிக்கும்

    முகத்தின் நிறத்தை கூட்டி அதை ஜொலிக்க வைக்க, பாதி பழுத்த வாழைப்பழத்தை எடுத்து கொள்ளவும். பின்பு அதை நன்கு மசித்து ½ டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் பச்சை பால் மற்றும் 2-3 சொட்டு ரோஸ் வாட்டர் சேர்க்கவும். பின்பு இந்த பேஸ்டை முகத்தில் தடவி கழுவவும்.

Image Credit : freepik

எண்ணெய் பசை சருமத்துக்கானது

    எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள், பழுத்த வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். இதனால் சருமம் சுத்தமாகவும், சாஃப்ட்டாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

Image Credit : freepik

வறண்ட சருமத்துக்கானது

    சருமம் மிகவும் வறண்டு காணப்பட்டால், 1 பழுத்த வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனுடன் 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவவும். இந்த ஃபேஸ் பேக் காய்ந்த பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

Image Credit : freepik

முகம் பிரகாசிக்கும்

    பழுத்த வாழைப்பழத்தில் அரிசி மாவு மற்றும் தேன் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். சுமார் 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்பு நார்மல் வாட்டரில் முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை தடவினால் சருமம் பொலிவு பெறும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    எனவே இந்த குளிர்காலத்தில் பொலிவிழந்து இருக்கும் உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்ற வாழைப்பழத்தை பயன்படுத்துங்களேன். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik