இட்லி பஞ்சு போல சாஃப்டாக இருக்கணுமா? மாவில் இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க
G Kanimozhi
18-07-2025, 22:06 IST
gbsfwqac.top
இட்லி என்று சொன்னாலே நம் அனைவருக்கும் பஞ்சு போல இருக்கும் குஷ்பூ இட்லி தான் நினைவிற்கு வரும். ஆனாலும் நாம் நினைக்கும் விதத்தில் இட்லி சில தருணங்களில் வருவதில்லை. அரிசி மற்றும் உளுந்து எப்படி ஊற வைத்து அரைக்க வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்.
இனி வீட்டிலேயே பஞ்சு போன்ற இட்லி தயாரிக்கலாம்
தேவையான பொருட்கள்
ரேஷன் அரிசி 3 கப், பச்சரிசி ஒரு கப், உளுந்து ஒரு கப், சாதம் அல்லது அவல் முக்கால் கப், மாவு அரைக்க தண்ணீர் 4 கப்
செய்முறை
ரேஷன் அரிசி பச்சரிசி உளுந்து மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக தண்ணீரில் நான்கு அல்லது ஐந்து முறை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்
ஸ்டெப் 2
இதில் சுடுதண்ணீர் ஊற்றி சுமார் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஸ்டெப் 3
இந்த ஊற வைத்த பொருட்களை அரைக்கும் போது இதில் முக்கால் கப் சாதம் அல்லது அவல் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
ஸ்டெப் 4
தேவையான அளவு உப்பு சேர்த்து மாவை நன்கு கரைத்து மூடி வைக்க வேண்டும். இரவில் அரைத்த மாவை அடுத்த நாள் காலையில் புளித்ததும் இட்லி ஊற்றினால் பஞ்சு போன்ற இட்லி தயார்.