ஹோட்டல் ஸ்டைலில் சுவையான, ஊட்டச்சத்துமிக்க காளான் பூண்டு கறி செய்வது எப்படி?


Balakarthik Balasubramaniyan
10-11-2022, 13:51 IST
gbsfwqac.top

    காளான் பூண்டு கறி சாப்பிட மிக சுவையாக இருக்கும். இதனை மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். இதை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம்.

Image Credit : herzindagi

தேவையான பொருட்கள்

  • காளான்- 400 கிராம்
  • பூண்டு- 25-30 பெரிய பல் (மசித்தது)
  • வெங்காயம்- 1 நடுத்தர அளவு (நறுக்கியது)
  • சில்லி ஃப்ளேக்ஸ்- 1 டீஸ்பூன்
  • மிளகு தூள்- 1 டீஸ்பூன்
  • வெள்ளை வினிகர்- 1 டீஸ்பூன்
  • உப்பு- சுவைக்கேற்ப
  • வெண்ணெய் - 50 கிராம்
  • எண்ணெய்- 2-3 டீஸ்பூன்
  • பச்சை கொத்தமல்லி- 2 டீஸ்பூன் (நறுக்கியது)

Image Credit : herzindagi

ஸ்டெப் 1

    முதலில், காளான்களை நன்றாக கழுவி, 2-3 துண்டுகளாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கவும்.

Image Credit : herzindagi

ஸ்டெப் 2

    இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடான பிறகு அதில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும், அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.

Image Credit : herzindagi

ஸ்டெப் 3

    வெங்காயம் வதங்கியதும், அதில் நறுக்கிய காளான்களை சேர்த்து, 2 முதல் 3 நிமிடங்களுக்கு அடுப்பை அதிக சூட்டில் வைத்து வதக்கவும்.

Image Credit : herzindagi

ஸ்டெப் 4

    அதன் பிறகு, அடுப்பை குறைத்து, காளான்களை மூடி வைத்து 6-8 நிமிடங்களுக்கு நன்றாக வேக வைக்கவும். இப்போது காளான்கள் நன்றாக வெந்திருக்கும்.

Image Credit : herzindagi

ஸ்டெப் 5

    இப்போது அதில் மசித்த பூண்டு சேர்த்து, நன்றாக கிளறி விடவும். பிறகு சிறிது நேரம் வதக்கி விட்டு, உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு தூள் சேர்த்து மீண்டும் கிளறவும்.

Image Credit : herzindagi

பரிமாறுதல்

    அதன்பிறகு வெள்ளை வினிகர் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து 4-6 நிமிடங்கள் வதக்க வேண்டும். இதோ காளான் பூண்டு கறி ரெடி. இதனை சப்பாத்தியுடன் சூடாக பரிமாறலாம்.

Image Credit : herzindagi

    இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருக்கவும்.

Image Credit : herzindagi