சமைக்கும் உணவில் எண்ணெய், உப்பு, காரம் அதிகமாகி விட்டதா? உங்களுக்கான சமையல் டிப்ஸ்
S MuthuKrishnan
21-07-2025, 12:00 IST
gbsfwqac.top
நீங்கள் சமைக்கும் உணவு ருசியாக இருக்க வேண்டுமென்றால் அதில் மிகவும் முக்கியமானது எண்ணெய், உப்பு, காரம் இவை உணவில் அதிகமாகிவிட்டதா உங்களுக்கான டிப்ஸ்
உருளைக்கிழங்கு
நீங்கள் சமைத்த உணவில் உப்பு அதிகமாகிவிட்டால், ஒரு உருளைக்கிழங்கை நறுக்கி நீங்கள் சமைத்த உணவில் சேர்த்து அடுப்பில் குறைந்த தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மனதில் உள்ள உப்பை உருளைக்கிழங்கு உறிஞ்சி விடும். இப்போது ஒரு நீங்கள் சமைத்த உணவு உப்பு குறைந்து சுவையாக இருக்கும்.
எலுமிச்சை சாறு
நீங்கள் சமைத்த உணவில் உப்பு அதிகமாக தெரிந்தால் அதில் எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி பிழிந்து விடவும். இதனால் உப்பு குறையும்.
வேக வைத்த உருளைக்கிழங்கு
நீங்கள் சமைத்த உணவில் எண்ணெய் அல்லது காரம் அதிகமாகி விட்டது என்றால் ஒரு உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து பெரிய துண்டுகளாக நறுக்கி பின்னர் அவற்றை நீங்கள் சமைத்த உணவில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும். உருளைக்கிழங்கு எண்ணெயை உறிஞ்சி விடும்.
பிரட்
நீங்கள் சமைத்து உணவு எண்ணெய் மற்றும் காரம் அதிகமாக இருக்கிறது என்றால் ஒன்று அல்லது இரண்டு பிரட் துண்டுகளை எடுத்து அதனை நீங்கள் செய்து வைத்துள்ள உணவின் மீது வைத்து ஐந்து நிமிடங்கள் சூடு செய்யவும். இப்படி செய்வதால் பிரட் துண்டுகள் அதிகப்படியான எண்ணெய் மற்றும் காரத்தை உறிஞ்சிவிடும்
தக்காளி
நீங்கள் செய்த உணவில் உப்பு, காரம், எண்ணெய் அதிகமாக இருந்தால் அதில் ஒன்று அல்லது இரண்டு தக்காளியை மிக்ஸியில் நன்கு கூலாக அரைத்து நீங்கள் செய்த உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்