கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை சமாளிக்க டிப்ஸ்


Alagar Raj AP
29-04-2025, 15:17 IST
gbsfwqac.top

கர்ப்ப கால மலச்சிக்கல்

    கர்ப்ப காலத்தில் பெண்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் ஒன்று புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் செரிமான அமைப்பை பாதிப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதை தடுக்க இந்த டிப்ஸை ஃபாலோவ் பண்ணுங்க.

நார்ச்சத்துள்ள உணவுகள்

    அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதால் உணவு எளிதில் செரிமானமாகும். இதற்கு வாழைப்பழங்கள், ஆரஞ்சு, உலர் பழங்கள், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.

திரவங்கள்

    திரவங்களை உட்கொள்வதால் உணவு விரைவில் செரிமானமாகி கழிவுகள் எளிதில் வெளியேறும். இதற்கு பால், மோர், பழச்சாறு, தேங்காய் தண்ணீர் குடிக்கவும்.

உடற்பயிற்சி

    வழக்கமான நடைப்பயிற்சி, யோகா செய்வதால் மலச்சிக்கலை தடுக்க முடியும். உடற்பயிற்சி குடல் அமைப்பை சீராக இயங்க செய்யும் இதனால் மலச்சிக்கல் ஏற்படாது.

புரோபயாடிக் உணவுகள்

    புரோபயாடிக் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இதற்கு பால் பொருட்கள், பீட்ரூட், ஆப்பிள், பட்டாணி ஆகிய உணவுகளை சாப்பிடலாம்.

மசாஜ்

    சாப்பிட்ட பிறகு 15 நிமிடங்கள் வயிற்றில் லேசாக மசாஜ் செய்வதன் மூலம் செரிமானம் தொடர்பான பாதிப்புகள் குறைக்கும். இதனால் நீங்கள் நிறைவாக உணர முடியும்.

மருத்துவர் ஆலோசனை

    மலச்சிக்கல் பாதிப்பு கடுமையாக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கான உணவு முறையை பின்பற்றலாம்.