கர்ப்ப பரிசோதனை செய்வதற்கு முன் இதை மறக்காம பண்ணுங்க; ரிசல்ட் சரியா இருக்கும்


G Kanimozhi
03-07-2025, 12:24 IST
gbsfwqac.top

கர்ப்ப பரிசோதனை

    சிறுநீரில் உள்ள ஹெச்சிஜி ஹார்மோன் அளவைக் கொண்டு அறியும் வகையில் இந்த கர்ப்ப பரிசோதனை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரியான நேரம்

    மாதவிடாய் தவறிய முதல் நாளுக்கு பிறகு கர்ப்ப பரிசோதனை செய்வது நல்லது. சில சோதனைகள் மாதவிடாய்க்கு முன்பே முடிவுகளை காட்டும். ஆனால் துல்லியமான முடிவுக்கு மாதவிடாய் தவறிய பிறகு சிறிது காலம் காத்திருந்த பரிசோதனை செய்யுங்கள்.

அதிகாலை சிறுநீர்

    அதிகாலையில் சேகரிக்கப்படும் சிறுநீரில் ஹெச்சிஜி ஹார்மோன் அளவு அதிகமாக இருக்கும். எனவே இது துல்லியமான முடிவுகளை பெற உதவும்.

தண்ணீர் குடிக்கக்கூடாது

    கர்ப்ப பரிசோதனைக்கு முன் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது சிறுநீரில் உள்ள ஹெச்சிஜி அளவை குறைக்கலாம்.

மருத்துவர் ஆலோசனை

    கர்ப்ப பரிசோதனையை வீட்டிலேயே டெஸ்ட் கிட் வைத்து செய்த பிறகு, இது குறித்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

ரத்த பரிசோதனை

    ஹெச்சிஜி எண்ணிக்கை அடிப்படையில் பரிசோதனை செய்ய மருத்துவர் பரிந்துரை செய்வார். இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சரியான ஹெச்சிஜி அளவை கண்டறிய முடியும்.

கவலை வேண்டாம்

    நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.