யார் இந்த ராம்கிருபா ஆனந்தன்? நாம் சாலையில் பார்த்து வியந்த கார்களின் வடிவமைப்பாளர்!


Alagar Raj AP
21-08-2024, 16:00 IST
gbsfwqac.top

ராம்கிருபா ஆனந்தன்

    இந்திய SUV வகை கார்களில் புரட்சியை ஏற்படுத்திய கார்களில் ஒன்று ஸ்கார்பியோ, இந்த கார் உள்ளிட்ட மஹிந்திராவின் முக்கிய SUV கார்களை வடிவமைத்த ராம்கிருபா ஆனந்தன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கல்வி

    பிட்ஸ் பிலானியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், ஐடி பாம்பேயில் ஸ்கூல் ஆஃப் டிசைனில் முதுகலை பட்டம் பெற்று தனது திறமைக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டார் ராம்கிருபா ஆனந்தன்.

மஹிந்திரா நிறுவனம்

    1997 ஆம் ஆண்டு மஹிந்திரா நிறுவனத்தில் இண்டீரியர் டிசைனராக பணியில் சேர்த்து பொலிரோ, ஸ்கார்பியோ மற்றும் சைலோ போன்ற கார்களின் இண்டீரியர் டிசைனராக ராம்கிருபா ஆனந்தன் பணியாற்றியுள்ளார்.

டிசைன் பிரிவு தலைவர்

    ராம்கிருபா ஆனந்தன் வடிவமைத்த XUV500 கார் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றது. இவரின் திறனை கண்டு வியந்த மஹிந்திரா 2005ம் ஆண்டு மஹிந்திராவின் டிசைன் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார்.

SUV கார்களின் புரட்சி

    இவரின் தலைமையின் கீழ் வடிவமைக்கப்பட்ட XUV700, தார் மற்றும் ஸ்கார்பியோ ஆகிய கார்களின் கவர்ச்சிகரமான அழகியல் மற்றும் வலுவான வடிவம் நுகர்வோரை கவர்ந்தது. இந்தியாவின் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்ற வாகனமாக இந்த கார்கள் அமைந்தன.

ஓலா நிறுவனம்

    மின்சார வாகனத் துறையை நோக்கி அனைவரின் கவனமும் செல்ல தொடங்க, 2022 ஆம் ஆண்டு ராம்கிருபா ஆனந்தன் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் டிசைன் தலைவராக பணியில் சேர்ந்தார்.

    நான்கு சக்கர வாகனத்தில் புதுமையான வடிவமைப்புகளை உருவாக்கிய இவர் இருசக்கர மின்சார வாகன துறையிலும் புரட்சியை உண்டாக்குவார் என ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.