குழந்தைகள் வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்?


S MuthuKrishnan
08-07-2025, 15:06 IST
gbsfwqac.top

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு சரியான ஊட்டச்சத்து மிகவும் முக்கியம்.

    தினமும் பாலில் பாதாம் மற்றும் பேரிச்சம்பழத்தை ஊற வைத்து கொடுங்கள்.

    முட்டை, மீன், கோழி போன்ற புரத உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    சர்க்கரையை விட தேன் கலந்து பால் கொடுப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

    முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகளை குழந்தைகளுக்கு உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

    பழங்கள் மற்றும் காய்கறிகள் தினமும் ஒரு சிறிய கப் அளவு குழந்தைகளுக்கு கொடுங்கள்.

    குழந்தைகளுக்கு ஜங்க் ஃபுட்ஸ் கொடுப்பதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.

    குழந்தைகளின் உடல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் குழந்தைகளை காற்றோட்டமாக விளையாட செய்யுங்கள்.

    குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் குழந்தைகள் நன்கு தூங்கினால் நன்கு வளருவார்கள்.

    தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள் அவர்களது வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    மன அழுத்தம் இல்லாமல் குழந்தைகளை பசல்ஸ், டிரஷர் ஹண்டிங் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள்.