அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த டாப் 7 பெண் முதலமைச்சர்கள்


Alagar Raj AP
20-02-2025, 17:38 IST
gbsfwqac.top

ஷீலா தீட்சித்

    டெல்லியின் முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித். இவர் 1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகள் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

மம்தா பானர்ஜி

    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2011 முதல் தற்போது வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் முதலமைச்சராக ஜொலித்து வருகிறார்.

ஜெ. ஜெயலலிதா

    தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் 6 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இதில் மொத்தம் 14 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.

வசுந்தரா ராஜே

    ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே இரண்டு முறை மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இதில் மொத்தம் 10 ஆடுகள் ஆட்சி செய்துள்ளார்.

மாயாவதி

    நான்கு முறை உத்தர பிரதேச முதலமைச்சராக பதவி வகித்த மாயாவதி 7 ஆண்டுகள் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார்.

ராப்ரி தேவி

    பீகார் முதலமைச்சராக இருந்தவர் ராப்ரி தேவி. இவர் 7 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

சசிகலா ககோட்கர்

    கோவா, டாமன் மற்றும் டையூ முதலமைச்சராக பதவி வகித்த சசிகலா ககோட்கர், 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார்.