இந்தியாவில் பெண்கள் அதிகமாக மது குடிக்கும் டாப் 7 மாநிலங்கள்
Alagar Raj AP
26-04-2025, 09:06 IST
gbsfwqac.top
பெண்கள் அதிகம் மது அருந்தும் மாநிலங்கள்
கடந்த 2019 - 2021ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவுகளின்படி பெண்கள் அதிகம் மது அருந்தும் டாப் 7 மாநிலங்களின் பட்டியல் இதோ.
சட்டிஸ்கர்
சத்தீஸ்கரில் 4.9% பெண்கள் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இங்கு விஸ்கி மற்றும் வோட்கா ஆகியவை இவர்களின் பிரபலமான தேர்வாக உள்ளன.
அந்தமான் & நிக்கோபார் தீவுகள்
அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் 5.0% பெண்கள் மது அருந்துகிறார்கள். இங்கு நடக்கும் விழாக்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் அதிகம் மது குடிப்பது வழக்கமாக உள்ளது.
ஜார்கண்ட்
ஜார்க்கண்டில், 6.1% பெண்கள் மது அருந்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக விளிம்புநிலையில் உள்ள பழங்குடியின பெண்களிடையே மது பழக்கம் அதிகமாக உள்ளது.
தெலுங்கானா
பட்டியலில் நான்காவது இடத்தில் தெலுங்கானா உள்ளது. இங்கு 6.7% பெண்கள் மது அருந்துவதை விரும்புகிறார்கள். இங்கு நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் மது அருந்துதல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அசாம்
பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள மாநிலம் அசாம். இங்கு 7.3% பெண்களுக்கு மது பழக்கம் இருக்கிறது. இங்குள்ள பழங்குடி மக்களுக்கு நீண்ட காலமாக மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
சிக்கிம்
இரண்டாவது இடத்தில் சிக்கிம் உள்ளது. இங்கு 16.2% பெண்கள் மது அருந்துகிறார்கள். ஏனெனில் இங்கு மத சடங்குகள், திருவிழாக்கள் மற்றும் சமூக நிகழ்வுகளில் மது பயன்பாடு என்பது பாரம்பரியமாக உள்ளது.
அருணாச்சலப் பிரதேசம்
பட்டியலில் முதல் மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் உள்ளது. அங்கு பெண்கள் மது அருந்தும் விகிதம் 24.2% ஆகும். சிக்கிம் மாநிலத்தை போலவே அங்கும் மது பயன்பாடு என்பது பாரம்பரியமாக உள்ளது.