மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கும் மாநிலங்கள்


Raja Balaji
08-03-2025, 07:32 IST
gbsfwqac.top

டெல்லி

    தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கும் திட்டம் மார்ச் 8ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா

    நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மாதந்தோறும் மகளிருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மகாராஷ்டிரா

    மகாராஷ்டிராவில் 21 முதல் 65 வயக்கு உட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் வங்கிக்கணக்கில் தலா 1,500 ரூபாய் செலுத்தப்படுகிறது.

ஜார்கண்ட்

    21 முதல் 49 வயதுக்கு உட்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கின் மாதத்தின் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது.

தமிழகம்

    தமிழகத்தில் மாதந்தோறும் ஒரு கோடி பெண்களுக்கு மேலாக உரிமைத் தொகை பெறுகின்றனர். ஒவ்வொருவர் கணக்கில் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது.

பஞ்சாப்

    பஞ்சாப் மாநிலத்திலும் மகளிருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்க வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனினும் நிதி நெருக்கடி காரணமாக பஞ்சாப் அரசாங்கத்தால் அந்த தொகையை வழங்கமுடியவில்லை.