உங்கள் குழந்தைகள் சரளமாக பொய் பேசுபவர்களாக வளர்கிறார்கள் என்பதற்கான 10 அறிகுறிகள்
S MuthuKrishnan
24-04-2025, 08:58 IST
gbsfwqac.top
காரணமே இல்லாமல் பொய் சொல்வது
உங்கள் குழந்தை பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத போதும் பொய் சொல்வார்கள். அந்த பொய் அவர்களுக்கு உதவாது, அர்த்தமுள்ளதாக இல்லாமல் இருந்தாலும் தொடர்ந்து பொய் சொல்வார்கள்.
கதைகள் மாறிக்கொண்டே இருக்கும்
உங்கள் குழந்தைகள் ஒவ்வொரு முறையும் ஒரு புதுவிதமான வித்தியாசமாக கதைகள் சொல்கிறார்களா அப்படி என்றால் அவர்கள் பொய்யை சரளமாக கூறுவார்கள்.
நாடகத் தன்மை பொய்கள்
அவர்களுடைய பொய்கள் பெரும்பாலும் மிகப்பெரியதாகவோ,கற்பனையாகவோ, மிகைப்படுத்தப்பட்டதாகவோ இருக்கும். அவர்கள் தெளிவாக உண்மையல்லாத விஷயங்களை பேசுவார்கள்.
குற்ற உணர்வு இல்லாத பொய்கள்
பொய் சொன்ன பிறகு அவர்கள் வருத்தப்படவில்லை. பொய் என்று பெற்றவர்கள் கண்டுபிடித்த பின்பும் அதற்கு வருத்தப்படவோ மன்னிப்பு கேட்கவோ இல்லை என்றால் அவர்கள் பொய் சொல்வதை தொடர்வார்கள்.
கேள்வி கேட்டால் கோபம்
நீங்கள் எளிய கேள்விகளைக் கேட்டால் அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள கோபப்படுவார்கள். மேலும் வேறு பேச்சை துவங்குவார்கள்.
மற்றவர்களை குறை கூறுதல்
அவர்கள் எப்போதும் வேறொருவரை குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களின் தவறு என்பது தெளிவாகத் தெரிந்தாலும் கூட மற்றவர்களை கூறுவர்.
கவனத்தை ஈர்க்க பொய்கள்
அவர்கள் மற்றவர்களால் பாராட்டப்படுவதற்கும் , கவனிக்கப்படுவதற்கும் சில விஷயங்களை புதிதாக உருவாக்கி பொய்களை கூறுவார்கள். இது அவர்களின் மீது நம் கவனத்தை ஈர்க்க கூறும் பொய்கள்.
நண்பர்களுடன் சிக்கல்
அவர்கள் அதிகப் பொய் கூறுவதால் மற்ற குழந்தைகளுடன் விளையாட விரும்புவதில்லை.
பழக்கமான பொய்கள்
முதலில் பிரச்சனைகளை சமாளிக்க பொய் சொல்வது அவர்களின் வழக்கமான வளியாகி விடுகிறது. அப்போது அவர்கள் உண்மையை விட அதிக பொய்களை சொல்கிறார்கள்.
தவறுகளை திருத்துவது
பொய் சொல்வது மற்றவர்களுக்கு தெரிந்த பின்பும் அவர்கள் பொய்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் அவர்கள் செய்வது அவர்களுக்கு தவறு என்றே புரிவதில்லை.அப்படி இருக்கும்போது அவர்கள் தவறுகளை திருத்துவதை விட்டு பொய் சொல்வதையே வளர்க்க மாற்றிக் கொள்கின்றனர்.