இந்திய சுதந்திரப் போராட்டத்தில் களம் கண்ட யாரும் அறிந்திடாத தமிழ்நாட்டு வீரமங்கைகள்


Alagar Raj AP
13-08-2024, 17:00 IST
gbsfwqac.top

சுதந்திரப் போரில் பெண் போராளிகள்

    இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்று பக்கங்களை திருப்பி பார்த்தல் அதில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் பங்கும் இருக்கும். அப்படி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்படாத வீரமும், தேசபக்தியும் நிறைந்த வீரமங்கள் பலர் உள்ளனர். அவர்களில் தமிழக்தை சேர்ந்த சில பெண் போராளிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சேலம் அங்கச்சி அம்மாள்

    அப்போதைய மெட்ராஸ், மவுண்ட் ரோடில் இருந்த கர்னல் நீலின் சிலையை அகற்ற தொடங்கப்பட்ட சத்தியாகிரகத்தில் அங்கம்வகித்த அங்கச்சி அம்மாள் தைரியமாக கையில் கோடாரியுடன் சிலையை உடைக்க புறப்பட்டார். இதற்காக அங்கச்சி அம்மாளுக்கு நீதிமன்றக் காவலும் ஏழு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

    திண்டுக்கலை சேர்ந்த இவர் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு போராடியதால் கிருஷ்ணம்மாள் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமின்றி இந்தியா சுதந்திரம் பெற்றால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சபதம் ஏற்று 1950ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அஞ்சலையம்மாள்

    கடலூரை சேர்ந்த அஞ்சலையம்மாள் உப்புக் காய்ச்சும் போராட்டம், கர்னல் நீலன் சிலையை அகற்றும் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்டவற்றில் பங்கேற்று தன் வாழ்வில் பெரும்பாலான நாட்களை சிறையில் அனுபவித்தார்.

அசலாம்பிகை அம்மையார்

    தனது புரட்சி மிக்க பாடல்கள் நூல்கள் மற்றும் மேடை பேச்சுக்கள் மூலம் சுதந்திர போராட்ட எழுச்சியை ஊட்டியவர் அசலாம்பிகை அம்மையார். அதுமட்டுமின்றி அப்போது பெண்களுக்கு இருந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியுள்ளார்.

சரஸ்வதி பாண்டுரங்கம்

    சேலத்தை சேர்ந்த சரஸ்வதி 1931இல் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்றதற்காக தன் குழந்தைகளுடன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரது குழந்தைகள் உயிரிழந்தாலும் மனம் தளராமல் ஆங்கிலேயரை எதிர்த்து சிறையில் போராடினார்.

சொர்ணதாம்பாள்

    மதுரையை சேர்ந்த சொர்ணதாம்பாள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றதற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி ஆடைகளின்றி அழகர் மலையில் ஒரு இரவு முழுவதும் சொர்ணதாம்பாளை காவல்துறையினர் விட்டு சென்றனர்.