விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்


Alagar Raj AP
20-09-2024, 14:46 IST
gbsfwqac.top

ராணுவம்

    சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் 30 வெவ்வேறு விமானங்களில் மொத்தம் 3,000 மணி நேரங்களுக்கு மேல் பறந்துள்ளார்.

விண்வெளி மாரத்தான்

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் டிரெட்மில்லில் 42 கி.மீ. மாரத்தான் ஓடிய முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் சுனிதா. இந்த தொலைவை 4 மணி நேரம் 24 நிமிடத்தில் முடித்தார்.

அதிக நாட்கள் விண்வெளியில்

    சுனிதா வில்லியம்ஸ் தன் முதல் விண்வெளிப் பயணத்தில் 195 நாட்கள் விண்வெளியில் செலவழித்தார். அப்போது முதல் முறையாக விண்வெளிக்கு சென்ற பெண்களில் அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த சாதனையை அவர் படைத்தார். இந்த சாதனை பின்னர் முறியடிக்கப்பட்டது.

இருமுறை விண்வெளியில்

    2006 மற்றும் 2012 ஆண்டுகளில் இரு முறை சுனிதா விண்வெளி பயணம் செய்துள்ளார். இதில் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் கழித்தார்.

விண்வெளி நிலையத்திற்கு வெளியே

    2006 மற்றும் 2012இல் இரு முறை விண்வெளிக்கு சென்ற போது விண்வெளி நிலையத்திற்கு வெளியே 50 மணி நேரம் 40 நிமிடங்கள் செலவிட்டுள்ளார். விண்வெளி நிலையத்திற்கு வெளியே அதிக நேரம் செலவழித்த பெண் விண்வெளி வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.

தேர்தல்

    தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு அங்கிருந்தே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர்.

பிறந்தநாள்

    கடந்த 2012 செப்டம்பர் 19ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் போது பிறந்தநாளை கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் தற்போது 2024லும் இரண்டாவது முறையாக விண்வெளி நிலையத்தில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.