married women: திருமணமான பெண்கள் மறந்தும் இந்த நாட்களில் தலை குளிக்க கூடாதாம்! ஏன் தெரியுமா?


Balakarthik Balasubramaniyan
21-11-2022, 11:50 IST
gbsfwqac.top

    இந்து சாஸ்திரத்தில் பல விதிகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை கடைப்பிடித்தால் வீட்டில் அமைதி, மகிழ்ச்சி பெருகும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் திருமணம் ஆன பெண்கள் தலைக்கு குளிப்பது பற்றியும் சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானவை பற்றி இங்கு பார்ப்போம்.

Image Credit : freepik

ஜோதிடர் சொல்வது என்ன?

    பெண்கள் தலைக்கு குளிப்பது குறித்து சொல்லப்படும் விதிகள் பற்றி பிரபல ஜோதிடரும் வாஸ்து நிபுணருமான டாக்டர் ஆர்த்தி தஹியாவிடம் பேசினோம். இது குறித்து அவர் கூறியதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Image Credit : freepik

திங்கட்கிழமை

    ஜோதிடத்தின் படி திருமணமான பெண்கள் திங்கட்கிழமை தலைக்கு குளிக்கக்கூடாது. இதனால் வீட்டின் முன்னேற்றம் தடைப்படும். ஒருவேளை அந்த நாளில் விரதம் இருந்தால் புரசு மரப் பூக்களை தலையில் வைத்துவிட்டு பின்பு தலைக்கு குளிக்கலாம்.

Image Credit : freepik

செவ்வாய்கிழமை

    திருமணமான பெண்கள் செவ்வாய்கிழமை அன்று தலைக்கு குளிப்பதற்கு ஜோதிடம் மறுப்பு தெரிவிக்கிறது. இந்த நாளில் தலைக்கு குளிப்பது வீட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்கிறது.

Image Credit : freepik

புதன்கிழமை

    தம்பிகள் உடைய பெண்கள் புதன்கிழமைகளில் தலைக்கு குளிக்க கூடாது. இதற்கு காரணம் புதன்கிழமையை ஆட்சி செய்யும் கிரகம் தான்.

Image Credit : freepik

வியாழக்கிழமை

    வேதங்களில் கூறப்பட்டுள்ளது படி வியாழக்கிழமை அன்று திருமணமான பெண்கள் தலைக்கு குளிப்பதால் கணவன்மார்களின் ஆயுள் குறைகிறதாம். பிள்ளைகள் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். இது வீட்டின் அமைதியையும் கெடுக்கும். வியாழக்கிழமை தலைக்கு குளிப்பதால் வீட்டில் பொருளாதார ரீதியாகவும் பிரச்சனையை சந்திக்கலாம்.

Image Credit : freepik

சனிக்கிழமை

    திருமணமான பெண்கள் சனிக்கிழமையும் தலைக்கு குளிக்கக்கூடாது. ஜோதிடத்தின்படி, இது சகுன குறைவாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை விரதம் இருப்பதால் சனிக்கிழமை அன்று தலைக்கு குளிக்க நினைத்தால், சனிதோஷம் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளவும். முதலில், பச்சை பாலை கொண்டு தலையை அலசிவிட்டு, அதன்பிறகு குளிக்கவும்.

Image Credit : freepik

எப்போது தலைக்கு குளிக்கலாம்?

    வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் திருமணமான பெண்கள் தலைக்கு குளிப்பது நல்லது. இதனால் நன்மைகளையும் பெறுவீர்கள்.

Image Credit : freepik

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik