குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அடிப்படை பழக்கங்கள்


Alagar Raj AP
30-04-2025, 17:04 IST
gbsfwqac.top

நோயெதிர்ப்பு சக்தி

    பொதுவாக குழந்தைகளுக்கு எந்த நோயாக இருந்தாலும் எளிதில் தாக்கும். அதற்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எனவே குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களை இந்த பழக்கங்களை கடைபிடிக்க சொல்லுங்க.

சுகாதாரம்

    சாப்பிடுவதற்கு முன் கைகளை கழுவுவது, வெளியே சென்று வீட்டிற்கு வந்த பிறகு கை, கால்களை கழுவுவது போன்ற அடிப்படை சுகாதார பழக்கங்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்.

உணவு பழக்கம்

    பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்ற உணவுகளை சாப்பிடுவது குறிப்பாக ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

உடல் செயல்பாடு

    யோகா, விளையாட்டு, நடனம் போன்ற உடல் செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபட பலக்குவதால் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

நீரேற்றம்

    போதுமான அளவு தண்ணீர் குடிக்க குழந்தைகளை ஊக்குவிக்கவும். நீரேற்றமாக இருந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

போதுமான தூக்கம்

    குழந்தைகளை தினமும் 8-10 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்துங்கள். அவர்கள் போதுமான நேரம் தூங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் மற்றும் உடல் திறன் அதிகரிக்கும்.

சந்தோஷமாக இருப்பது

    குழந்தைகளை எப்போதும் சந்தோஷமாக இருப்பதை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் கோவப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகரித்து, அது வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை குறைக்கும். இதனால் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைக்கும்.