சர்வதேச மகளிர் தினம் பற்றிய 9 சுவாரஸ்யமான தகவல்கள்
Alagar Raj AP
07-03-2025, 14:41 IST
gbsfwqac.top
சர்வதேச மகளிர் தினம்
பெண்களின் சாதனைகளை நினைவுகூர்ந்து அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், பாலின ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாகுபாடு காரணமாக பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தின சுவாரஸ்யங்கள்
பெண்மையைக் கொண்டாடும் இந்த மகளிர் தினத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காண்போம்.
முதல் மகளிர் தினம்
குறைந்த ஊதியத்திற்கு எதிராக நியூயார்க்கில் போராட்டம் நடத்திய 15,000 பெண்களின் நினைவாக 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவில் முதல் மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.
கிளாரா ஜெட்கின்
ஜெர்மன் நாட்டை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியான கிளாரா ஜெட்கின் தான் மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என முதன் முதலில் முன்மொழிந்தவர்.
வாக்குரிமை
சர்வதேச மகளிர் தினம் ஆரம்பத்தில் பல்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டது. ஆனால் அதன் பின் 1913 ஆம் ஆண்டு ரஷ்ய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாளான மார்ச் 8 தேதியே சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
நிற கருப்பொருள்
சர்வதேச மகளிர் தினத்திற்கான வண்ண கருப்பொருளாக ஊதா, பச்சை மற்றும் வெள்ளை நிறங்கள் உள்ளன. ஊதா நிறம் மரியாதை மற்றும் நீதியையும், பச்சை நம்பிக்கையையும், வெள்ளை தூய்மையையும் குறிக்கிறது.
அன்னையர் தினம்
பெண்கள் தாய்மார்களாக இருப்பதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும் விதமாக உஸ்பெகிஸ்தான் பல்கேரியா, ருமேனியா, மாசிடோனியா, செர்பியா மற்றும் அல்பேனியா போன்ற நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் அன்னையர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
முதல் கருப்பொருள்
ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் ஒரு வித்தியாசமான கருப்பொருளைக் வைத்து கொண்டாடப்படுகிறது. அதன்படி 1996 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் தினத்திற்கான முதல் கருப்பொருளை ஐ.நா. உருவாக்கியது.
வேறு பெயர்
‘பெண்கள் உரிமைகள் மற்றும் சர்வதேச அமைதிக்கான ஐக்கிய நாடுகள் தினம்’ என்று சர்வதேச மகளிர் தினத்திற்கு மற்றொரு பெயர் உள்ளது.
தேசிய விடுமுறை
ரஷ்யா, உக்ரைன், ஆப்கானிஸ்தான், வியட்னாம், உகாண்டா, மங்கோலியா, கம்போடியா, ஆர்மீனியா, கியூபா, ஜார்ஜியா, லாவோஸ், பெலாரஸ், மாண்டினீக்ரோ ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் தேசிய விடுமுறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வரலாற்று மாதம்
2011ஆம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மார்ச் மாதத்தை அமெரிக்காவில் பெண்கள் வரலாற்று மாதமாக அறிவித்தார். அதன்படி அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பெண்கள் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது.