பெண்களை பாதிக்கும் 7 பொதுவான புற்றுநோய் வகைகள்


Alagar Raj AP
04-02-2025, 12:20 IST
gbsfwqac.top

புற்றுநோய்

    காலம் காலமாக உலகையே ஆட்டிப்படைக்கும் நோய்களில் ஒன்று புற்றுநோய். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி பெண்களை பாதிக்கும் புற்றுநோய் வகைகள் என்னவென்று பார்க்கலாம்.

மார்பக புற்றுநோய்

    மார்பக புற்றுநோய் பெண்களில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். இது மார்பக செல்கள் அசாதாரணமாக வளர்ந்து புற்றுநோய் கட்டிகளை உருவாக்கும்.

தோல் புற்றுநோய்

    அதிக சூரிய ஒளியில் தோல் வெளிப்படும் போது தோல் புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தோல் நிறத்தில் மாற்றம், புள்ளிகள், அரிப்பு, வலி போன்றவை தோல் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளாக உள்ளன.

கருப்பை புற்றுநோய்

    கருப்பை புற்றுநோய் 'அமைதியான புற்றுநோய்' என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இந்த புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாது. கருப்பையில் உள்ள புற்றுநோய் செல்கள் வேகமாக வளர்ந்து திசுக்களை அழிக்கும்.

இரைப்பை புற்றுநோய்

    ஆண்களை போலவே பெண்களை பாதிக்கும் பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று இரைப்பை புற்றுநோய். மரபணு, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்கள் இந்த ஏற்படுவதாக கூறப்படுகிறது. உணவு விழுங்குவதில் சிரமம், அடிக்கடி வயிற்று வலி, கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு போன்றவை இரைப்பை புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள்.

நுரையீரல் புற்றுநோய்

    புகைபிடிப்பது, புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருப்பது, காற்று மாசு, அடுப்பில் இருந்து வரும் புகை போன்றவற்றால் பெண்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்க வாய்ப்புள்ளது. அடிக்கடி மூச்சு தினறால், நெஞ்சு வலி, தொடர்ச்சியான இருமல், உடல் எடை இழப்பு ஆகியவை நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோய்

    பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படும் இது ஆண், பெண் இருவரையும் பாதிக்கும் பொதுவான புற்றுநோயாகும். பெருங்குடலில் உள்ள புற்றுநோய் செல்கள் அதிகரித்து கட்டியை உருவாக்கும். மரபணு மற்றும் வாழ்க்கை முறை காரணங்கள் இந்த புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எண்டோமெட்ரியல் புற்றுநோய்

    எண்டோமெட்ரியல் புற்றுநோய் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கும் புற்றுநோய். கருப்பையின் புறணியில் இந்த புற்றுநோய் உருவாகும். 50 வயதுக்கு பிறகு மாதவிடாய் நின்ற பெண்களை எண்டோமெட்ரியல் புற்றுநோய் அதிகம் பாதிப்பதாக வாய்ப்புள்ளது.