தம்பதிகளாக இருக்கும் போது பண விஷயத்தில் தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்


Alagar Raj AP
22-04-2025, 15:13 IST
gbsfwqac.top

நிதி திட்டமிடல்

    ஒரு தம்பதியினரின் உறவில் காதலை தாண்டி பணம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நிதி மிக முக்கியமானது. தம்பதிகள் ஒன்றாக பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க புத்திசாலித்தனமான நிதி திட்டமிடல் அவசியம். அதற்கு பண விஷயத்தில் இந்த 6 தவறுகளை செய்யாதீங்க.

தனிப்பட்ட முடிவு

    பண விஷயத்தில் பெரிய முடிவுகளை தனியாக எடுக்க கூடாது. உங்கள் துணையுடன் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

ஒரே வங்கி கணக்கு

    உங்கள் இருவரின் வருமானத்தில் கிடைக்கும் எல்லா பணத்தையும் ஒரே வங்கி கணக்கில் வைக்காமல், தனிப்பட்ட செலவுகளுக்கு தனிப்பட்ட வங்கி கணக்குகளையும் பகிரப்பட்ட செலவுகளுக்கு கூட்டுக் வங்கி கணக்கையும் வைத்திருங்கள்.

தனிப்பட்ட பட்ஜெட்

    குடும்பத்திற்காக ஒரு பட்ஜெட்டை உருவாக்கும் போது இருவருக்கும் தனித்தனியே பட்ஜெட் இருக்க கூடாது. உங்கள் வரவு செலவுகளை ஆராய்ந்து ஒன்றாக ஒரே பட்ஜெட்டை அமைக்க வேண்டும்.

ஈகோ பிரச்சனை

    ஒருவர் மற்றவரை விட அதிகமாக சம்பாதிக்கும் போது அல்லது அதிகமாக செலவு செய்யும் போது தம்பதியினர் இடையே இந்த பிரச்சனை ஏற்படலாம். ஆனால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சேமிப்பு இல்லாமை

    வருமானத்தில் வரும் பணத்தில் சில சதவீதத்தை சேமிக்காமல் இருக்ககூடாது. ஏனெனில் வாழ்க்கையில் சில சமயங்களில் துரதிர்ஷ்டவசமான நிலைமையால் நிதி நெருக்கடி ஏற்படும். அதை சமாளிக்க சேமிப்பு பணம் கைகொடுக்கும்.

வெளிப்படைத்தன்மை இல்லாமை

    தனிப்பட்ட பண பரிவர்த்தனை குறித்து தம்பதியினர் இருவரும் ஒருவருக்கொருவர் எதையும் மறைக்க கூடாது. வரவு செலவுகள், வங்கியில் இருப்பு பணம், கடன் குறித்து இருவரும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.