ஜப்பான் மக்கள் மிகவும் புத்திசாலிகளாகக் கருதப்படுவதற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் வேகமாக கற்கும் திறன். அதற்கு அவர்கள் பின்பற்றும் 6 நுட்பங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
Pomodoro Technique
ஜப்பான் மக்கள் முதலில் 25 நிமிடங்கள் தொடர்ந்து படித்துவிட்டு, பின்னர் 5 நிமிடங்கள் ஓய்வெடுப்பார்கள். இதை தொடர்ந்து 4 முறை செய்த பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்வார்கள். இதனால் சோர்வடையாமல் படிக்க முடியும்.
Cornell Notes
நீங்கள் படிக்க நினைக்கும் தலைப்பை மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும். அதில் முதல் பகுதியில் குறிப்புகளும், இரண்டாம் பகுதியில் கேள்விகளையும், மூன்றாம் பகுதியில் சந்தேகங்களையும் எழுத வேண்டும்.
Mind Mapping
மைண்ட் மேப்பிங் என்றால் ஏதாவது ஒன்றைப் பற்றிய தலைப்பை மையமாக வைத்து அதை சுற்றி துணைத் தலைப்புகள் மற்றும் அதற்கான விடைகளை சுற்றி எழுதி சேர்க்கலாம். இப்படி செய்வதால் தலைப்புகளை எளிதில் நினைவில் கொள்ள முடியும்.
Flash Card technique
ஜப்பான் மக்களுக்கு, அவர்களுக்கு வேண்டிய விஷயங்களை சிறிய அட்டைகளில் எழுதும் பழக்கம் உள்ளது. அதை பார்ப்பதன் மூலம், அவர்களுக்கு வேண்டிய விஷயங்களை எளிதில் நினைவில் கொள்கிறார்கள்.
Output Practice
இந்த நுட்பத்தின் மூலம், நீங்கள் எதையாவது படித்திருந்தால், அதை எழுதி பார்க்க வேண்டும். ஏனெனில் எழுதுவது நீங்கள் படித்ததை நீண்ட நேரம் நினைவில் வைத்திருக்க உதவும்.
Kaizen
இந்த நுட்பத்தின் உதவியுடன், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் தவறாமல் படிப்பது உங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். இதனால் கற்றல் திறன் படிப்படியாக அதிகரிக்கும்.