ஒவ்வொரு இந்திய பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 10 சிறப்பு சட்டங்கள்
Alagar Raj AP
06-03-2025, 19:06 IST
gbsfwqac.top
பெண்களுக்கான சட்டங்கள்
இந்தியாவில் பெண்களுக்கு என்று பல சிறப்பு சட்டங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான 10 பாதுகாப்பு சட்டங்களை இங்கே பார்ப்போம்.
இரவில் கைது செய்ய உரிமையில்லை
ஏதேனும் ஒரு வழக்கில் மாஜிஸ்திரேட்டின் உத்தரவு இல்லாமல் இந்தியாவில் பெண்களை இரவு நேரத்தில் கைது செய்ய முடியாது. அப்படியே கைது செய்வதாக இருந்தால் பெண் காவல் அதிகாரி உடன் இருக்க வேண்டும்.
பணியிடத்தில் துன்புறுத்தலுக்கு எதிரான உரிமை
பணியிடத்தில் பெண்களுக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவுகள் அளிக்கப்பட்டால், 2013 சட்ட விதிகளின் படி, பெண்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்கலாம்.
கண்ணிய உரிமை உண்டு
இந்தியாவில் ஒரு பெண்ணை பெண் மருத்துவர் அல்லது பெண் செவிலியர் இல்லாமல் ஒரு ஆண் மருத்துவரால் மருத்துவ பரிசோதனை செய்ய முடியாது.
வீட்டில் இருந்தபடி புகார் தெரிவிக்கலாம்
ஒரு பெண் நேரடியாக காவல் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தால் ஒரு பெண் காவலரை அவரது இல்லத்திற்கு அனுப்பி புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.
சம ஊதியம் பெற உரிமை
1976 ஆம் ஆண்டின் சம ஊதியச் சட்டத்தின்படி, பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் ஆண்களுக்கு எவ்வளவு சம்பளம் தரபடுகிறதோ அதே சம்பள தொகையை பெண்களும் கேட்ட சம உரிமை உண்டு.
கருக்கலைப்பு செய்யும் உரிமை
எம்.டி.பி திருத்தச் சட்டம், 2021 படி இந்தியாவில் பெண்கள் 24 வாரங்களுக்குள் அவர்களது திருமண நிலையைப் பொருட்படுத்தாமல் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு.
தொந்தரவுக்கு புகார் செய்யும் உரிமை
ஐபிசியின் 354டி பிரிவின்படி, பெண்களை தேவையில்லாமல் தொந்தரவு செய்யும் னநபர்கள் மற்றும் பின்தொடரும் நபர்கள் மீது புகார் தெரிவிக்க உரிமை உண்டு.
ஜீரோ எப்ஐஆர் உரிமை
பெண்களுக்கு எதிராக குற்றம் நடந்தால் எந்தவொரு காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம். அதன் பின் அந்த புகார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்படும். இது ஜீரோ எப்ஐஆர் என்று அழைக்கப்படுகிறது.
குடும்ப வன்முறைக்கு எதிரான புகார்
இந்திய பெண்களுக்கு தனது கணவர், காதலன் அல்லது ஏதேனும் குடும்ப உறுப்பினர்களால் பொருளாதார ரீதியாக, உணர்ச்சி ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக தொந்தரவு நேர்ந்தால் அதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 498வது பிரிவின் படி, புகார் தெரிவிக்க உரிமை உள்ளது.