basil leaves: துளசி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!


Balakarthik Balasubramaniyan
17-11-2022, 12:34 IST
gbsfwqac.top

    இந்துக்கள் துளசியை கடவுளாக வணங்குகின்றனர். காரணம் என்னவென்று தெரியுமா? இதனால் நமக்கு கிடைக்கும் பலவிதமான மருத்துவ குணங்கள் தான். துளசியை சாப்பிட, பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். அவை என்னவென இப்போது படித்து பயன்பெறலாம்.

Image Credit : freepik

துளசியில் இருக்கும் சத்துக்கள்

    துளசியில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் - A, வைட்டமின் - K, மாங்கனீசு, ஆக்சிஜனேற்ற பண்பு, அலர்ஜி எதிர்ப்பு பண்பு, நுண்ணியிரிகளுக்கு எதிரான பண்பு என பல சத்துக்கள் உள்ளது. இது உங்களை உடல் ரீதியாக நோய்கள் எதுவுமின்றி பாதுகாக்கிறது.

Image Credit : freepik

துளசியை சாப்பிடும் முறை

    4 முதல் 5 துளசி இலைகளை பறித்து அலசி, வெறும் வயிற்றில் தினமும் காலையில் பற்கள் படாமல் சாப்பிட்டு வரலாம். நீங்கள் துளசியில் டீ போட்டும் குடிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டும் குடிக்கலாம்.

Image Credit : freepik

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

    துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வர, இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும், இது உங்களுக்கு எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.

Image Credit : freepik

உடல் எடை குறையும்

    தினமும் துளசி இலையை சாப்பிட்டு வர, செரிமான கோளாறுகள் இருக்காது. உடல் எடையையும் உங்களால் குறைக்க முடியும்.

Image Credit : freepik

சுவாச கோளாறுகள் நீங்கும்

    துளசியில் உள்ள நற்குணங்கள், நீங்கள் மூச்சு விடும்போது வரும் துர்நாற்றத்தை போக்க உதவும். அதனால் தினமும் 2 முதல் 4 துளசி இலைகளை நீங்கள் சாப்பிட்டு வரலாம்.

Image Credit : freepik

பருவக்கால நோய்கள் வராது

    துளசியில் காய்ச்சலுக்கு எதிரான பண்புள்ளது. இது உங்களுக்கு வரக்கூடிய பருவக்கால காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

Image Credit : freepik

தொண்டை கரகரப்பு சரியாகும்

    துளசி இலையை தேனுடன் கலந்து குடிக்க, சளி மற்றும் தொண்டை கரகரப்பு பிரச்சனை சரியாகும்.

Image Credit : freepik

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik