tomato benefits: உங்களுக்கு ஆரோக்கியம் மற்றும் அழகு என இரண்டையும் அள்ளித்தரும் தக்காளி ஜூஸ் பற்றி அறிவீரா!!!
Sreeja Kumar
24-11-2022, 13:43 IST
gbsfwqac.top
தக்காளியில் வைட்டமின்-A, வைட்டமின்-C, நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் மிகவும் நன்மை தரக்கூடியவை. தக்காளி ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Image Credit : freepik
உடல் எடையை குறைக்கும்
தக்காளியில் உள்ள கரையாத நார்ச்சத்து உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க தக்காளி ஜூஸை குடித்து வரலாம்.
Image Credit : freepik
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
தக்காளியில் வைட்டமின்- K மற்றும் லைகோபீன் போன்ற ஊட்டச்சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. அதனால் தக்காளியை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ளவும்.
Image Credit : freepik
சுருக்கங்களை போக்கும்
தக்காளியில் இருக்கும் கரோட்டினாய்டு, வயதான தோற்றம் தெரிவதை தடுக்க உதவுகிறது. தக்காளி ஜூஸை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், முதுமையால் ஏற்படும் சுருக்கங்களில் இருந்து விடுபடலாம்.
Image Credit : freepik
தோல் பிரச்சனைகளை நீக்கும்
தக்காளி ஜூஸ் பருக்கள், திட்டுக்கள் போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. தக்காளியை ஜூஸாகவும் குடிக்கலாம், பேஸ் பேக் ஆகவும் பயன்படுத்தலாம்.
Image Credit : freepik
மன அழுத்தத்தை குறைக்கும்
தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் பெண்களுக்கு பல நன்மைகளை தருகிறது. இது மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை போக்கவும் உதவுகிறது.
Image Credit : freepik
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்
தக்காளியில் உள்ள கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின்-C, ஃபிளாவனாய்டு, ஃபோலேட் மற்றும் வைட்டமின்-E போன்ற ஊட்டச்சத்துகள் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த உதவுகின்றன.
Image Credit : freepik
கண்களுக்கு நன்மை தரும்
தக்காளி ஜூஸில் வைட்டமின்-C அதிக அளவில் உள்ளது, இது கண்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. உங்கள் உணவு முறையில் தக்காளி ஜூஸை சேர்த்து கொள்ளுங்கள். இதனால் உங்களின் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
Image Credit : freepik
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.