குளிர்காலத்தில் ஏன் வேர்க்கடலை சாப்பிட வேண்டும் தெரியுமா?
Prabhanjani V S
16-12-2022, 14:34 IST
gbsfwqac.top
வேர்க்கடலையின் பலன்கள்
குளிர் காலத்தில் வேர்க்கடலை அதிகம் உண்ணப்படுகிறது. பலர் நேரத்தை கழிப்பதற்காக வேர்க்கடலை சாப்பிடுவார்கள், ஆனால் இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்
Image Credit : freepik
எடையைக் குறைக்கும்
குளிர்காலத்தில் உடல் எடையைக் குறைக்க வேர்க்கடலை மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இதை சாப்பிட்டால், நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது, எனவே அதிக உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம். இந்த வழியில், இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
Image Credit : freepik
இதய நோய் வருவதை தடுக்கும்
வேர்க்கடலையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் இதய அடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் உள்ள டிரிப்டோபென் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
Image Credit : freepik
புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்
வேர்க்கடலையில் பைட்டோஸ்டெரால் மிக அதிக அளவில் உள்ளது, இது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது
Image Credit : freepik
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்
வேர்க்கடலை சாப்பிடுவதால் மாங்கனீசுடன் உடலுக்குத் தேவையான பல தாதுக்களும் கிடைக்கின்றன. இதன் மூலம் சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது.
Image Credit : freepik
கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்
வேர்க்கடலையில் ஒற்றைச்செறிவிலா (monounsaturated) மற்றும் பல்செறிவிலா(polyunsaturated) கொழுப்புகள் அதிக அளவில் உள்ளன, இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க வேலை செய்கிறது. மேலும், நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது.
Image Credit : freepik
கருவுறுதலை மேம்படுத்தும்
வேர்க்கடலையில் ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது. இதன் பயன்பாடு பெண்கள் கருவுறுதலை மேம்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் இதை சாப்பிட்டால் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.
Image Credit : freepik
சருமத்தை நீரேற்றம் நிரம்ப வைத்திருக்கும்
வேர்க்கடலை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஒற்றைச்செறிவிலா அமிலம் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.