ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!


Sreeja Kumar
12-12-2022, 11:56 IST
gbsfwqac.top

    வேகவைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இவ்வாறு சமைக்கப்படும் உணவுகளில் ஊட்டச்சத்து மதிப்பு குறையாமல் அப்படியே இருக்கும். வேக வைத்த உணவில் கொழுப்பு மற்றும் கலோரிகளின் அளவும் குறைவு.

Image Credit : freepik

எடை அதிகரிக்காது

    உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு வேகவைத்த உணவு மிகவும் ஏற்றது. இதில் கொழுப்பு மிகவும் குறைவாக இருப்பதால் எளிதில் செரிமானமாகிறது. இதனால் உடல் எடையை குறைக்க வேக வைத்த உணவுகள் உதவுகின்றன.

Image Credit : freepik

செரிமானத்திற்கு ஏற்றது

    அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வேகவைத்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும். ஆவியில் சமைத்த பிறகு, உணவின் நார்ச்சத்து மென்மையாகி எளிதில் ஜீரணம் ஆகிறது.

Image Credit : freepik

ஊட்டச்சத்துக்கள் குறைவதில்லை

    உணவுகளை வேக வைத்து சமைக்கும் போது அதன் ஊட்டச்சத்து கூறுகள் அழிக்கப்படுவதில்லை என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இதனால் தான் வேகவைத்த உணவுகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன.

Image Credit : freepik

இதயத்திற்கு ஏற்றது

    இதயத்தின் தமனிகளை சேதப்படுத்தும் கெட்ட கொலஸ்ட்ரால்கள் வேகவைத்த உணவில் இருப்பதில்லை. இதன் காரணமாக வேகவைத்த உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது என கூறப்படுகிறது.

Image Credit : freepik

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

    வேகவைத்த உணவின் சிறப்பு என்னவென்றால் அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அப்படியே தக்கவைக்கப்படுகின்றன. உணவுகளை வேக வைத்து சமைக்கும் போது அதன் தரம் பாதுகாக்கப்படுகிறது.

Image Credit : freepik

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது

    ஆவியில் வேக வைக்கும் உணவுகளில் எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.

Image Credit : freepik

கொழுப்பு இல்லாத உணவு

    வேகவைத்த உணவுகள் எண்ணெய் இல்லாமல் சமைக்கப்படுகின்றன, இதனால் இந்த உணவில் கொழுப்பு இல்லை. எனவே எந்த பயமும் இல்லாமல் இதை நிம்மதியாக சாப்பிடலாம். இதனால் உங்கள் எடையும் அதிகரிக்காது.

Image Credit : freepik

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

Image Credit : freepik