முதலில் 2 கப் நீள வாக்கில் நறுக்கிய உருளைக்கிழங்கை குளிர்ந்த நீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும். அல்லது பிரிட்ஜ்ல் வைத்து எடுத்துக்கவும்.
ஒரு வெறும் வாணலியை ஸ்டவ்வில் வைத்து மல்லி, மிளகாய், மிளகு, சீரகம், கிராம்பு, பட்டையை மணம் வரும்வரை வறுத்து எடுத்துக்கவும்.
அதே வாணலியில் நீளமாக நறுக்கின வெங்காயம், பொடியாக நறுக்கின பூண்டை எண்ணெய் விடாமல் மொறு மொறுன்னு வறுத்து எடுத்துக்கவும்.
ஆறின பிறகு மிக்ஸியில் வறுத்து வைத்திருக்கும் எல்லா மசாலா சாமான்கள் சேர்த்து அத்துடன் மஞ்சள்தூள், உப்பு, ஆம்சூர் பவுடர், சாட் மசாலா சேர்த்து பொடி செய்துக்கவும். பெறி பெறி மசாலா தூள் தயார்.
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் உருளைக்கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கவும். அத்துடன் பெறி பெறி மசாலா சேர்த்து கலந்து டொமட்டோ ஸோஸுடன் பரிமாறவும். சுவையான பெறி பெறி பிரெஞ்சு பிரைஸ் தயார்.