jaggery: சுத்தமான வெல்லத்தை கண்டறிய உதவும் குறிப்புகள்


Prabhanjani V S
05-12-2022, 15:17 IST
gbsfwqac.top

    பொதுவாக, குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க வெல்லம் சாப்பிடுவார்கள். இது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் இப்போதெல்லாம் கடைகளில் போலியான, கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது. எனவே சுத்தமான தரமான வெல்லத்தை அடையாளம் காண உதவும் சில குறிப்புகளைத் தெரிந்து கொள்வோம்.

Image Credit : freepik

சுவைத்து பார்த்துக் கண்டறியலாம்

    வெல்லம் எப்போதும் இனிப்பாகத் தான் இருக்கும். எனவே வெல்லத்தை சுவைத்து பார்க்கும்போது அதில் சிறிது உப்புச் சுவை இருந்தால், அது போலியானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Image Credit : freepik

நிறத்தின் மூலம் கண்டுபிடிக்கலாம்

    வெல்லத்தின் நிறத்தைப் பார்த்து அது சுத்தமானதா அல்லது போலியானதா என்பதை தீர்மானிக்க முடியும். உண்மையான வெல்லத்தின் நிறம் பழுப்பு, ஆனால் போலியான வெல்லம் வெளிர் மஞ்சள், வெள்ளை அல்லது சற்று சிவப்பான நிறத்திலும் இருக்கும்.

Image Credit : freepik

ஹைட்ரோகுளோரிக் அமிலம் பயன்படுத்தி கண்டறியலாம்

    வெல்லத்தின் தரத்தைக் கண்டறிய, அதில் 20 சொட்டு செறிவூட்டப்பட்ட ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் கலக்கவும். அதன் பிறகு வெல்லத்தின் நிறம் இளஞ்சிவப்பாக மாறினால், அந்த வெல்லம் கலப்படம் செய்யப்பட்டது என்று அர்த்தம்.

Image Credit : freepik

தண்ணீரில் போடவும்

    வெல்லம் சுத்தமானதா என்பதை கண்டறிய, ஒரு துண்டு வெல்லத்தை தண்ணீரில் போட்டுக் கரைக்கவும். வெல்லம் முழுமையாகக் கரைந்தால், அது சுத்தமான வெல்லம். வெல்லம் கரைந்தவுடன் தண்ணீரின் அடிப்பகுதியில் ஏதாவது தங்கியிருந்தால், அதில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

Image Credit : freepik

அரைத்து சோதித்து பார்க்கவும்

    வெல்லத்தை இனிப்பாக்கவும், அதன் அளவை அதிகரிக்கவும் படிகங்கள் மற்றும் சுண்ணாம்பு சேர்க்கப்படுகின்றன. எனவே, வெல்லத்தை அரைத்து, அதன் தரத்தை சோதித்து பார்க்கலாம். அரைத்த வெல்லத்தில் படிகங்கள் காணப்பட்டால், அது கலப்படம் செய்யப்பட்டதாகும்.

Image Credit : freepik

கசப்பான சுவை

    கடைகளில் வாங்கிய வெல்லம் கொஞ்சம் கசப்பாகத் தோன்றினால், அது போலியானது என்று அர்த்தம். ஏனெனில் இது கேரமலைசேஷன் செயல்முறையின் மூலம் செய்யப்பட்டதாகும்.

Image Credit : freepik

பிராண்டட் வெல்லத்தை மட்டுமே வாங்கவும்

    நல்ல பிராண்ட் கம்பெனி வெல்லத்தை வாங்க எப்போதும் முயற்சிக்க வேண்டும். தனியாக வெல்லம் வாங்கும்போது அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம்.

Image Credit : freepik

    இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்

Image Credit : freepik