அழகான உடல் அமைப்பை பெற உதவும் யோகா!!!


Sreeja Kumar
22-12-2022, 17:21 IST
gbsfwqac.top

யோகா

    யோகா செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்துடன் உடல் அமைப்பும் மேம்படும். உடலுக்குச் சிறந்த வடிவம் கொடுத்து, வசீகரமானதாக மாற்ற உதவும் யோகாசனங்களை பற்றி இந்தப் பதிவில் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

Image Credit : freepik

தடாசனம்

    இந்த ஆசனத்தைச் செய்ய, முதலில் நேராக நிற்கவும். பின்னர் இரு கைகளையும் உயர்த்தி ஒன்றோடொன்று இணைக்கவும். இப்போது நீண்ட மூச்சை எடுத்து, பாதங்களை மேல்நோக்கி உயர்த்தவும்.

Image Credit : freepik

உஸ்த்ராசனம்

    இந்த ஆசனத்தைச் செய்ய, முதலில் தரையில் முட்டிப் போடுவது போல் உட்கார்ந்து பின்புறமாக வளைக்கவும். பின்பு கைகளால், உங்கள் கால் பாதங்களைத் தொட முயற்சிக்கவும். சிறிது நேரம் இதே நிலையிலிருந்து பின்பு இயல்பு நிலைக்குத் திரும்பவும்.

Image Credit : freepik

வீரபத்ராசனம்

    முதலில் நேராக நின்று பின் இரு கால்களையும் விலக்கி வைக்கவும். பின்பு, ஒரு காலை மட்டும் முழங்காலில் மடக்கி, கைகளை விரிக்கவும். இதே நிலையில் சிறிது நேரம் இருக்கவும்.

Image Credit : freepik

கோமுகாசனம்

    இந்த ஆசனத்தைச் செய்ய, கால்களை நீட்டி உட்காரவும். பின்னர், இடது காலை மடக்கி, குதிகாலை இடுப்புக்கு அருகில் கொண்டு வரவும், பின்பு வலது காலை வளைக்கவும். இப்போது இரண்டு கைகளையும் பின்புறம் வைத்து உள்ளங்கைகளை இணைக்கவும்.

Image Credit : freepik

புஜங்காசனம்

    இந்த ஆசனத்தை செய்ய முதலில் தரையில் வயிறு படும்படி படுத்து இரு கைகளையும், கால்களையும் நேராக வைத்துக் கொள்ளவும். பின்னர் மூச்சு விடும்போது, மார்பை மேலே உயர்த்தவும். இந்நிலையில் கைகளை நேராக வைத்துக் கழுத்தை பின்னோக்கி சாய்க்கவும்.

Image Credit : freepik

மலை போஸ்

    இந்த ஆசனம் செய்ய முதலில் நேராக நிற்கவும். பின்னர் இரண்டு கைகளையும் உயர்த்தி ஒன்றோடொன்று இணைக்கவும். உள்ளங்கைகளை மேலே உயர்த்தி பிடித்து, நேர்பார்வையுடன் மனதை ஓர்நிலைப்படுத்துங்கள். இதை செய்யும்போது கணுக்கால்களை சற்று மேலே தூக்கவும்.

Image Credit : freepik

சூரிய நமஸ்காரம்

    இந்த அனைத்து ஆசனங்களையும் தவிர, தினமும் குறைந்தது 5 முறையாவது சூரிய நமஸ்காரம் செய்ய முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உடலுக்கு நல்ல வடிவம் கிடைப்பதுடன் மன நிம்மதியும் கிடைக்கும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik