உடல் எடையை குறைக்க தேங்காய் எண்ணெய்; எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?
G Kanimozhi
22-07-2025, 12:07 IST
gbsfwqac.top
தேங்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்க எப்படி உதவும்?
எளிதில் ஜீரணமாகும்
மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணம் ஆகும் சக்தி கொண்டுள்ளது. இதனால் இது உடல் எடை குறைய உதவுகிறது.
ஹார்மோன் சமநிலை
இந்த தேங்காய் எண்ணெயில் உள்ள பாலிபீனால்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதனால் ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படக்கூடிய எடை அதிகரிப்பு தடுக்கும்.
ரத்த சர்க்கரை அளவு
தேங்காய் எண்ணெய் உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். இதனால் அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது.
தேநீருடன் கலந்து குடிக்கலாம்
தினமும் காலையில் சூடான தண்ணீர் அல்லது தேநீருடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.
இறைச்சியில் பயன்படுத்தலாம்
நாம் சமைக்கும் இறைச்சியில் மசாலாக்கள் தடவி சமைப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை இறைச்சியின் மேல் தடவ வேண்டும். இது அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும்.
தினசரி சமையல்
தேங்காய் எண்ணெய் உங்கள் தினசரி சமையலில் பயன்படுத்துவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.