தொண்டை கரகரப்பு உடனே நீங்க; இந்த 6 இயற்கை வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க


G Kanimozhi
17-07-2025, 13:33 IST
gbsfwqac.top

மஞ்சள் பால்

    ஒரு கிளாஸ் பாலை சூடாக்கி அதில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம். மஞ்சளில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் தொற்றுக்களை நீக்கி தொண்டை வலியை குணப்படுத்த உதவும்.

எலுமிச்சை சாறு தேன்

    சிறிதளவு எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிப்பதால் தொண்டையில் வறட்சி மற்றும் தொண்டை வலி நீங்கி நிவாரணம் தரும். எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை சளியை கரைக்க உதவுகிறது.

துளசி

    துளசியை சூடான தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தொண்டையில் உள்ள புண் குணமாகும். துளசியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வளர்ச்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை வலியை குணப்படுத்தும்.

இஞ்சி டீ

    இந்த இஞ்சி டீ குடிப்பதால் தொண்டை வலிக்கு நிவாரணம் கிடைப்பதோடு சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவும்.

சூடான தண்ணீர்

    வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு துணியை நனைத்து அதை தொண்டையில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் தொண்டை தசைகள் தளர்வடைந்து வலி குறையும் மற்றும் சளியும் குணமாகும்.

மிளகுக்கீரை டி

    மிளகு கீரை இலைகளில் உள்ள மென்தால் எனப்படும் இயற்கையான வேதிப்பொருள் தொண்டையில் குளிர்ச்சியை உண்டாக்கி வலியை குறைக்கும்.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்