தொடர்ந்து ஒரு வாரம் அரிசி கழுவிய தண்ணீரை முகத்தில் தடவினால் என்ன ஆகும்
S MuthuKrishnan
22-06-2025, 18:15 IST
gbsfwqac.top
கொரிய பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க அரிசி கழுவும் தண்ணீரை தான் பயன்படுத்துகிறார்கள்.
பளபளப்பு
அரசி கழுவிய தண்ணீரில் வைட்டமின் பி மற்றும் ஈ உள்ளன. அவை சருமத்தை பளபளக்கமாக வைத்திருக்கும்.
கரும்புள்ளி
அரிசி கழுவிய நீரை தொடர்ந்து ஒரு வாரம் முகத்தில் தடவுவதால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையும்.
முகப்பரு
அரிசி கழுவிய நீரை தொடர்ந்து ஒரு வாரம் முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் குறைந்து தோல் எரிச்சல் நீங்கும்.
துளைகள்
அரிசி கழுவிய நீரை முகத்தில் தடவி வருவதன் மூலம் முகத்தில் உள்ள துளைகள் பிரச்சனை நீங்கி சருமம் மென்மையாகும்.
சருமம் பிரகாசிக்கும்
அரிசி கழுவிய நீரில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்தை பிரகாசிக்க வைக்கும் மற்றும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும்.
கிளன்சிங்
அரிசி கழுவிய நீர் ஒரு இயற்கையான கிளன்சிங் ஆகும். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது.
பயன்படுத்தும்முறை
அரிசி கழுவிய நீரை ஒரு பாட்டிலில் நிரப்பி அவ்வப்போது ஒரு பஞ்சின் மூலம் தொட்டு முகத்தில் தடவலாம். அதனுடன் கடலை மாவு முல்தானிமட்டி மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக் ஆகவும் பயன்படுத்தலாம்.