உடலில் அதிக பித்தம் ஏற்படுவதால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதங்களில் இருக்கின்றன.உங்கள் பதங்களை அழகாக மற்ற இங்கே கூறியுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்.
உருளைக்கிழங்கு
வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் சிறிது பால் கலந்து, இந்த பேஸ்ட்டை தடவி, 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் உங்கள் கால்களைக் கழுவவும். இது உங்கள் குதிகால் வெடிப்புகளையும் குணப்படுத்தும்.
தேங்காய் எண்ணெய்
வெடிப்புள்ள குதிகால்களை தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்யவும். அதன் பிறகு, சாக்ஸ் அணியவும். இரவு முழுவதும் பாதங்களில் எண்ணெயை வைத்திருங்கள். காலையில் கழுவவும். இதுவே எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள சிகிச்சையாகும்.
கற்றாழை
ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பவும். உங்கள் குதிகால்களை 5-10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை சுத்தம் செய்து உலர வைக்கவும். இப்போது கற்றாழை ஜெல்லை அவற்றின் மீது தடவவும். அதன் பிறகு, சாக்ஸ் அணிந்து, கற்றாழை ஜெல்லை இரவு முழுவதும் உங்கள் குதிகால்களில் விட்டு விடுங்கள். காலையில் சாதாரண நீரில் கழுவவும்.
குறிப்பு
தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில், பாதத்தைக் கழுவி வரவேண்டும் இதனாலேயே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 8 முதல் 10 டம்ளர் நீர் பருக வேண்டும். வெடிப்பு அதிகம் இருந்தால் கூடுதலாக நீர் அருந்த வேண்டும்.
பெட்ரோலியம் ஜெல்லி, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை மாய்ஸ்ச்சரைசராகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதனால் பாதத்தில் வலி குறையும்.