சரும வறட்சியை போக்கும் எண்ணெய்கள் இவை தான் தெரியுமா!


Prabhanjani V S
09-12-2022, 17:28 IST
gbsfwqac.top

    குளிர்காலத்தில், சருமம் வறண்டு போவதை தவிர்க்க முடியாது. இதனால், சருமம் தொடர்பான வேறுபல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. உயிரற்ற வறண்ட சருமத்தை பராமரிக்க உதவும் சில எண்ணெய்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

Image Credit : freepik

ஆலிவ் எண்ணெய்

    இறந்த செல்கள் நீங்கி, புதிய செல்கள் உருவாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். இதனை முகத்தில் தடவினால், சருமம் வறண்டு போகாது, மேலும் மென்மையாகவும் மாறும்.

Image Credit : freepik

பாதாம் எண்ணெய்

    குளித்து முடித்தபிறகு உடலில் பாதாம் எண்ணெய் தடவி வந்தால், சரும வறட்சி நீங்கும். இதனைத் தடவுவதால் சருமம் நீண்ட நேரத்திற்கு ஈரத்தன்மையுடன் இருக்கும்.

Image Credit : freepik

நல்லெண்ணெய்

    சுட வைத்த நல்லெண்ணெயை, உங்கள் கை விரல்களைக் கொண்டு முகத்தில் தடவவும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் வறட்சி ஏற்படாமல், ஈரத்தன்மையுடன் இருக்கும்.

Image Credit : freepik

தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. குளித்தபிறகு இதனை உடலில் தடவினால், சருமம் நாள் முழுவதும் ஈர தன்மையுடன் இருக்கும்.

Image Credit : freepik

கடுகு எண்ணெய்

    ஒன்று அல்லது இரண்டு சொட்டு கடுகு எண்ணெயை முகத்திலும், வறண்ட சரும பகுதிகளிலும் தடவி, சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவவும். இது பொலிவற்ற மற்றும் வறண்ட சரும பிரச்சனையை நீக்கிவிடும்.

Image Credit : freepik

அவகேடோ எண்ணெய்

    இந்த எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் E உள்ளது. இதனை கைகளிலும், கால்களிலும் தடவினால், சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.

Image Credit : freepik

ஜொஜோபா எண்ணெய்

    வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிய பிறகு இந்த எண்ணெயை முகத்தில் தடவவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால், சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.

Image Credit : freepik

    குளிர்காலத்தில் உங்கள் சருமம் வறண்டு போவதை தடுக்க, இந்த எண்ணெய்களை பயன்படுத்துங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik