டீ குடித்தால் நோய்கள் குணமாகும் என்று பலர் கூறுவதை நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால், முகத்தை அழகாக்கும் ஒரு டீ உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், அது தான் செம்பருத்தி டீ. இந்த செம்பருத்தி டீயை குடித்தால் முகம் எப்படி அழகாகும் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
Image Credit : freepik
தெளிவான முகம்
அதிமதுரம், சோம்பு, துளசி, இலவங்கப்பட்டை ஆகியவற்றை செம்பருத்தி டீயில் கலந்து குடித்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும்.
Image Credit : freepik
வயதான தோற்றத்தை தடுக்கும்
செம்பருத்தி பூவுக்கு தீவிர மூலக்கூறுகளை அகற்றும் ஆற்றல் உள்ளது. செம்பருத்தி டீ குடித்தால், முகத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்களும், கோடுகளும் குறையும்.
Image Credit : herzindagi
முகம் பளபளக்கும்
செம்பருத்தி பூவில் வைட்டமின் C, நார்ச்சத்து, ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது. இதனை தினமும் குடித்தால் முகம் பளபளக்க தொடங்கும்.
Image Credit : freepik
சுருக்கங்களை குறைக்கும்
செம்பருத்தி டீ குடிப்பது முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும். இதனை குடித்துவர, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் மாறும்.
Image Credit : freepik
சரும பிரச்சனைகளை சரி செய்யும்
செம்பருத்தியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. எனவே இந்த செம்பருத்தி டீயை குடித்தால் முகம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இது சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
Image Credit : freepik
செம்பருத்தி டீ போடுவது எப்படி
செம்பருத்தி டீ தயார் செய்ய, 2 முதல் 3 டீஸ்பூன் காய்ந்த செம்பருத்தி பூ இதழ்களை, 2 கப் தண்ணீரில் சேர்க்கவும். இதனை 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டி விட்டு, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.
Image Credit : freepik
நீங்களும் முயற்சிக்கலாம்
நீங்களும் எந்த சிரமமும் இல்லாமல் உங்கள் முகத்தை அழகாக்க விரும்பினால், கண்டிப்பாக இந்த செம்பருத்தி டீயை குடிக்கவும்.
Image Credit : freepik
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.