herzindagi
image

தீபாவளி அக்.31ஆம் தேதி ? நவ.1ஆம் தேதி?... திடீரென கிளம்பிய சந்தேகம்

தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதியா அல்லது நவம்ப 1ஆம் தேதியா என யாரோ கொழுத்திப்போட்ட கேள்வி இணையத்தில் காட்டுத் தீ போல் பரவியுள்ளது. பஞ்சாங்கத்தின்படி தீபாவளி கொண்டாட்ட தேதி, விளக்கு ஏற்றும் நேரம் இந்த பதிவில் மிகத் தெளிவாக பகிரப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2024-10-29, 18:01 IST

தீபங்களின் திருவிழா என்றழைக்கப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடுகள் அனைத்தையும் சுத்தப்படுத்தி, தோரணம் மற்றும் பூக்களால் அலங்கரித்து, வீட்டில் பலகாரங்கள் தயாரித்து, புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்கி அன்புக்குரியவர்களுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ நாம் அனைவருமே தயாராகி வருகிறோம். திடீரென பலருக்கும் தீபாவளி திருநாள் அக்டோபர் 31ஆம் தேதியா அல்லது நவம்பர் 1ஆம் தேதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வருடம் தீபாவளி கொண்டாட்ட தேதி குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

தீபாவளி 2024 : அக்.31 அல்லது நவ.1 ?

பஞ்சாங்கத்தின் படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட வேண்டும். அதே நாளில் லட்சுமி பூஜை செய்வதும் நல்லது. அமாவாசையான அன்று மாலை நேரத்தில் முழு நிலவும் தென்படும்.

diwali date

தீபாவளி 2024 : பூஜை நேரம்

  • லட்சுமி பூஜை - அக்டோபர் 31ஆம் தேதி, மாலை 6:52 மணி முதல் 8:41 வரை
  • பிரதோஷம் - மாலை 6.10 முதல் 8.52 வரை
  • அமாவாசை திதி தொடக்கம் - அக்டோபர் 31ஆம் தேதி, காலை 6.22 மணி
  • அமாவாசை திதி முடிவு - அக்டோபர் 31ஆம் தேதி காலை 8.46 மணி

மாலை 6:52 மணி முதல் 8:41 மணி வரை என சுமார் ஒரு மணி நேரம் 39 நிமிடங்களுக்கு லட்சுமி பூஜை செய்து ஆன்மிக பலன்களை பெறலாம். மேலும் மாலை 6.54 மணி முதல் 8:54 வரை பூஜை செய்வது வீட்டின் வளத்தையும், செல்வத்தையும் அதிகரிக்கும்.
பிரதோஷ நேரத்தில் விளக்குளை ஏற்றி நீங்கள் பூஜை செய்யலாம்.

மேலும் படிங்க கந்த சஷ்டி விரதம் கடைபிடித்து முருகனை வழிபடுங்கள்! வாழ்க்கையில் சிக்கல்கள் தீரும்

இந்த குழப்பங்கள் எல்லாம் 5 நாட்கள் தீபாவளி கொண்டாடும் வட மாநிலங்களில் தான். அக்டோபர் 29ஆம் தேதி தந்தேராஸில் ஆரம்பித்து சோட்டி தீபாவளி (நரக் சதுர்த்தி), தீபாவளி, லட்சுமி பூஜை, கோவர்தன் பூஜை, பௌ-பீஜ் என ஐந்து நாட்களும் தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடுவர். தமிழகத்தில் இந்த குழப்பம் தேவையில்லை இரண்டு வாரத்திற்கு முன்பே அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அறிவித்து, 1ஆம் தேதி பொதுமக்களின் நலன் கருதி அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மேலும் தொடர் நான்கு நாட்கள் விடுமுறையாக தமிழக மக்கள் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கியுள்ளனர்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]