herzindagi
image

பாட்டி ஸ்பெஷல்: இட்லி, தோசைக்கு ருசியான கறிவேப்பிலை பொடி செய்முறை!

கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றல் அளிப்பதோடு, தலைமுடி வளர்ச்சியையும் சீராக்குகிறது.
Editorial
Updated:- 2025-10-24, 23:22 IST

நாம் சாப்பிடும் போது வேண்டாம் என்று தூக்கி எறியும் கறிவேப்பிலையில் அத்துணை ஊட்டச்சத்துக்கள் ஒளிந்துள்ளது. இதனால் தான் நம்முடைய பாட்டிமார்கள் தங்களது உணவு முறையில் கறிவேப்பிலையை அதிகளவில் உபயோகித்து வந்தனர். குறிப்பாக இட்லி, தோசைக்கு சட்னிக்குப் பதிலாக கறிவேப்பிலையை பொடியை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். நம்முடைய மூதாதையர்கள் போன்று எப்போதும் வலுவுடன் இருக்க வேண்டும் என்றால் நீங்களும் ஒருமுறையாவது கறிவேப்பிலை பொடியைத் தயார் செய்துப் பாருங்கள். இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.

மேலும் படிக்க: மழைக்கு இதமாக ஒரு கப் சூப் குடிக்க ஆசையா? இந்த சூப்களை ட்ரை பண்ணுங்க


உடலுக்கு ஆற்றல் அளிக்கும் கறிவேப்பிலை பொடி:

  • கறிவேப்பிலை - 4 கப்
  • மிளகு - 2 டீஸ்பூன்
  • மிளகாய் வத்தல் - 5
  • பெருங்காயம் - சிறிதளவு
  • புளி - சிறிதளவு
  • உளுந்தம்பருப்பு - 4 டீஸ்பூன்

கறிவேப்பிலை பொடி தயார் செய்யும் முறை:

  • உடலுக்கு வலுச்சேர்க்கும் கறிவேப்பிலை பொடி தயார் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் மிளகு, மிளகாய் வத்தல், உளுந்தம்பருப்பு, புளி, வர கொத்தமல்லி போன்றவற்றை வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பின்னதாக, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • இவை அனைத்தையும் ஆற வைத்த பின்னதாக மிக்ஸியில் போட்டு நொறு நொறுப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

  • இதையடுத்து அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியுடன் சிறிதளவு பெருங்காயத் தூள் சேர்த்து கலக்கினால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கறிவேப்பிலை பொடி ரெடி.
  • இந்த கறிவேப்பிலை பொடியை இட்லி அல்லது தோசைக்கு சைடு டிஸ்ஸாக வைத்துக் கொள்ளலாம். சாம்பார் மற்றும் சட்னி செய்ய முடியாத நேரத்தில் பல தாய்மார்களுக்கு சமையலை சுலபமாக்கவும் நிச்சயம் இந்த கறிவேப்பிலை பொடி நல்ல மாற்றாக அமையக்கூடும்.

மேலும் படிக்க: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டை வைத்து அல்வா செய்யலாமா? ரெசிபி டிப்ஸ் இங்கே!

கறிவேப்பிலையின் நன்மைகள்:

கறிவேப்பிலையில் உள்ள இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை இரத்த சோகை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது முதல் உடல் செரிமானம் சீராக நடைபெறவும் கண் பார்வையையும் மேம்படுத்துகிறது.

 

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]