herzindagi
image

ஆந்திரா ஸ்பெஷல் பூத்தரேக்கலு; வீட்டில் செய்து பாருங்க ரெசிபி இதோ

உங்கள் வீட்டில் இருக்கும் சுட்டிக் குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை சாப்பிட மிகவும் பிடிக்கும் என்றால் இந்த ஆந்திர பிரதேஷ் ஸ்பெஷல் ஸ்வீட் பூத்தரேக்கலுவை வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-11-26, 15:54 IST

ஆந்திராவின் ஒரு பிரபலமான பாரம்பரியமான ஸ்வீட் வகை இந்த பூத்தரேக்கலு. இது பெரும்பாலும் ஆந்திராவில் உள்ள ஹோட்டல்களில் பெரிய பானை போன்ற பாத்திரத்தில் வைத்து தான் சமைப்பார்கள். இந்த ஸ்வீட் வகை பார்ப்பதற்கு மெல்லியதாக பேப்பர் போலவே இருக்கும், ஆனால் இதன் சுவை மிக அருமையாக நாக்கில் எச்சில் ஊற வைக்கும் என்று தான் கூற வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் சுட்டிக் குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை சாப்பிட மிகவும் பிடிக்கும் என்றால் இந்த ஆந்திர பிரதேஷ் ஸ்பெஷல் ஸ்வீட்  பூத்தரேக்கலுவை வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

பூத்தரேக்கலு செய்ய தேவையான பொருட்கள்:

 

  • பச்சரிசி ஒரு டம்ளர்
  • சர்க்கரை ஒரு கப் (தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம்)
  • சிறிதளவு நெய்
  • சிறிதளவு முந்திரி, பாதாம், பிஸ்தா பொடியாக நறுக்கியது
  • தேவையான அளவு உப்பு
  • ஏலக்காய் 2

சுவையான பூக்கரை கிலோ செய்வது எப்படி?

 

முதலில் ஒரு டம்ளர் பச்சரிசியை அளந்து எடுத்து நன்றாக தண்ணீரில் கழுவி தண்ணீர் ஊற்றி சுமார் ஆறு மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை பச்சரிசியை ஊற வைக்க வேண்டும். இதற்குப் பிறகு நன்றாக ஊறிய பச்சரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து இந்த மாவை நன்கு கலக்க வேண்டும். குறிப்பாக இந்த மாவில் நிறைய தண்ணீர் ஊற்றி தண்ணீர் பதத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து நாம் எடுத்து வைத்த ஒரு கப் சர்க்கரை அல்லது உங்களுக்கு தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தலாம். ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் சர்க்கரை மற்றும் இரண்டு ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நாம் பொடியாக நறுக்கி வைத்த முந்திரி பாதாம் பிஸ்தா ஆகியவற்றை அதே மிக்ஸியில் போட்டு பவுடர் போல நன்றாக அறைக்க வேண்டும்.

Pootharekulu_dry-fruit_-720x400

இதனை அடுத்து ஆப்பம் செய்யும் சட்டி ஒன்றை எடுத்து அதில் ஒரு கரண்டி மாவை மெல்லிதாக ஊற்றி வேக வைத்து மொறுமொறுவென்று வரும் வரை காத்திருங்கள். இப்போது அதேபோல இரண்டு முறை இந்த மாவை ஆப்ப சட்டியில் ஊற்றி மொறுமொறுவென்று வரும் வரை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து நாம் எடுத்து வைத்த மாவு பேப்பர் போல இருக்கும். இதன் மேல் சிறிதளவு நெய் சேர்த்து தடவவும். இதற்குப் பிறகு நாம் மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்த சர்க்கரை நட்ஸ் கலவையை ஒரு ஸ்பூன் எடுத்து இந்த பேப்பரில் தூவி விடவும். 

மேலும் படிக்க: தித்திக்கும் கேரளா ஸ்டைல் பலாப்பழ எரிசேரி செய்முறை

இப்போது இந்த சர்க்கரை நட்ஸ் கலவையை இந்த பேப்பர் முழுவதுமாக தூவிவிட்ட பிறகு முதலில் இரண்டு ஓரங்களையும் மடித்து பிறகு மற்ற பக்கத்தை அப்படியே ரோல் செய்வது போல மடிக்க வேண்டும். இதே போல சிறிய ரோல் வடிவில் இந்த ஸ்வீட்டை செய்து வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான  பூத்தரேக்கலு ரெடி. இந்த ஆந்திராவின் பாரம்பரிய  பூத்தரேக்கலு ஸ்வீட் எவ்வளவு சாப்பிட்டாலும் அவ்வளவு சீக்கிரத்தில் திகட்டாது. இதனால் குழந்தைகள் கூட இதை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.

Image source: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]