herzindagi
image

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை ; மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்!

கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 760 குறைந்துள்ளது.
Editorial
Updated:- 2025-09-25, 13:37 IST

இன்றைக்கு அனைத்துத் தரப்பட்ட குடும்பத்தினர் இல்லங்களில் சேமிப்பின் அடையாளமாக உள்ளது தங்கம். கையில் கொஞ்சம் காசு இருந்தால் பொன்னாகவோ? அல்லது பொருளாகவோ? வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்பார்கள். ஆம் ஒன்னு நிலத்தில் போடு இல்ல தங்கத்தில் போடு என்ற வார்த்தைகளை நம்முடைய முன்னோர்கள் அடிக்கடி கூறி கேட்டிருப்போம். இதற்கேற்றார் போல் தான் வீட்டில் உள்ள பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் சிறிய தொகையை வைத்துக்கூட கிராம்களில் நகைகளை வாங்கி வருகிறார்கள்.

ஆனால் இன்றைக்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆம் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக காலை, மாலை என இரு வேளைகளிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இதன் படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது ரூ. 10 ஆயிரத்தைக் கட்ந்து விட்டதால் சமானிய மக்கள் தங்க நகைகளை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: அட்சய திருதியை 2025 : தங்க மழை பொழிய மகாலட்சுமி வழிபாடு; வளம் பெருக செய்ய வேண்டியவை

ஏற்றம் இறக்கத்தில் தங்கத்தின் விலை:

நேற்றைய நிலவரப்படி அதாவது செப்டம்பர 24 ஆம் தேதியன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூபாய் 40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10, 600க்கு விற்பனையானது. இதன் படி சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து ஒரு பவுன் தங்க நகை ரூ.84, 800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது இல்லத்தரசிகளைப் பெரும் கவலைக்குள்ளாகியது. இந்த சூழலில் தான் தற்போது தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 மேலும் படிக்க: Gold Cleaning : தங்க நகைகள் அழுக்கு படிந்து கறுத்து போனாலும் வீட்டிலேயே பாலிஷ் செய்யலாம்

செப்டம்ர் 25 ல் தங்கத்தின் விலை:

சென்னை ஆபரண தங்கத்தின் விலை செப்டம்பர் 25 ஆம் தேதியான இன்று கிராமிற்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,510க்கு விற்பனையாகிறது. இதன் படி ஒரு பவுன் தங்கத்தின் விலையானது ரூ. 720 குறைந்து ரூ. 84,080க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூபாய் 150க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு குறைந்துள்ள தங்கத்தின் விலையானது மேலும் குறைய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு சமானிய மக்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது.

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]