herzindagi
image

அட்சய திருதியை 2025 : தங்க மழை பொழிய மகாலட்சுமி வழிபாடு; வளம் பெருக செய்ய வேண்டியவை

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது சிறப்பானது. அதை விட முக்கியமானது மகாலட்சுமி வழிபாடு. அட்சய திருதி நாளின் பின்னணி என்ன ? வீட்டின் வளம் பெருகிட செய்ய வேண்டிய முக்கிய விஷயம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Editorial
Updated:- 2025-04-30, 06:24 IST

தங்கம் விலை ஒரு கிராம் 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் அட்சய திருதியை நாளில் அதை வாங்கி மகிழ்ந்திட பலரும் ஆவலோடும் இருப்பீர்கள். அட்சய திருதியை தங்கம் வாங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. இந்த நாளில் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைத்தால் வீட்டின் வளம், செல்வம் தானாக பெருகும். மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு மனம் உருகி வேண்டி நம்மால் முடிந்ததை எளியோருக்கு தர்மம் செய்யும் போது நாம் வேண்டியதை மகாலட்சுமி நமக்கு வழங்குவது உறுதி. தர்மம் செய்வதற்கு கையில் காசு இருக்க வேண்டும் என அவசியமில்லை.

akshaya tritiya 2025

அட்சய திருதியை 2025

ஆதிசங்கரர் கை ஏந்தி யாசகம் கேட்ட போது தங்கள் வீட்டில் விரதத்தை முடிக்க வைத்திருந்த ஒரு நெல்லிக்கனியையும் யாசகம் கேட்டு வந்தவரிடம் இல்லை என்று சொல்வதற்கு மனம் இல்லாமல் தானம் செய்கிறாள் ஒரு பெண். தன்னிடம் இருப்பதை கொடுத்த உள்ளத்தை வியந்து பார்த்த ஆதிசங்கரர் இப்படியொரு நபரை நீ ஏன் காணாமல் இருக்கிறார் என கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியிடம் கேட்கிறார். இதையடுத்து அப்பெண்மணி வீட்டில் தங்க நெல்லிக்கனி பொழிகிறது.

அட்சய திருதியை மகாலட்சுமி வழிபாடு

பலனை எதிர்பாராமல் தர்மம் செய்யும் போது மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும். அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியின் திருஉருவப் படத்திற்கு தாமரை பூ போடவும். கற்கண்டு சாதம், பால் பாயாசத்தை நெய வேத்தியமாக படைக்கவும். நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி போன்ற உணவுப் பொருட்களையும், துணி ஆகியவற்றை வாங்கி தர்மம் செய்யவும். எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். இந்த நாளில் நல்எண்ணத்தோடு புதிய பொருட்கள் வாங்கலாம், புதிய முயற்சிகளை தொடங்கலாம்.

அட்சய திருதியை வழிபாடு நேரம்

இந்த வருடம் ஏப்ரல் 30ஆம் தேதி அட்சய திருதியை அமைந்திருக்கிறது. 29ஆம் தேதி இரவு 8.49 மணிக்கு தொடங்கி 30ஆம் தேதி மாலை 6.41 மணிக்கு ஆட்சய திருதியை நிறைவு பெறுகிறது.

  • காலை 6 மணி முதல் 7 மணி வரை
  • காலை 9 மனி முதல் 10 மணி வரை
  • காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை

இந்த மூன்று நேரங்களில் நீங்கள் வீட்டில் மகாலட்சுமி வழிபாடு செய்யலாம். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]