herzindagi
image

தீபாவளிக்கு வீட்டிற்கு பெயின்ட் அடித்தால் இத்தனை நன்மைகள் உறுதி!

தீபாவளி பண்டிகைக்கு வீட்டை பெயின்ட் அடித்தால் பல நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. தீபாவளிக்கு பெயின்ட் அடிப்பது பாரம்பரிய வழக்கமாகும். இதன் முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் விரிவாக...
Editorial
Updated:- 2024-10-30, 15:45 IST

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி வீட்டை சுத்தப்படும் பணிகளில் நம் அம்மா தீவிரம் காட்டி வருவார். ஏனெனில் தீபங்களின் திருவிழா என்பது குடும்ப உறவுகள் ஒன்று கூடி உற்சாகமாக கொண்டாடும் தருணமாகும். இந்த பண்டிகையை சிறப்பாக்கிடும் பல்வேறு அம்சங்களில் வீட்டிற்கு பெயின்ட் அடிப்பதும் ஒன்று. தீபாவளி பண்டிகைக்கு வீட்டை பெயின்ட் அடிப்பது தொன்று தொட்டு பின்பற்றப்படும் பாரம்பரிய வழக்கமாகும். அந்தக் காலத்தில் எல்லாம் தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகளின் போது மட்டுமே வீட்டிற்கு வெள்ளை அல்லது பெயின்ட் அடிப்பார்கள். தீபாவளிக்கு பெயின்ட் அடிப்பது ஏன் முக்கியம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

தீபாவளிக்கு வீட்டை ஏன் பெயின்ட் அடிக்கணும் ?

இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான தீபாவளி இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும். தீமையை ஒழித்து நன்மை பெற்ற வெற்றியை குறிக்கும் விதமாக தீபாவளி நாளில் விளக்குகள் ஏற்றப்படுகிறது. இந்த முக்கியமான கொண்டாட்டத்தில் வீட்டிற்கு பெயின்ட் அடிப்பது பிரதானமாகும்.

தீபாவளி பண்டிகைக்கு வீட்டை பெயின்ட் அடித்தால் எதிர்மறை ஆற்றல் விலகி வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும். பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் நிறங்கள் இருளை நீக்கிடும் ஒளியை குறிக்கிறது. பண்டிகை சூழலை உருவாக்கிட வீட்டிற்கு கட்டாயம் பெயின்ட் அடிக்கவும்.

painting significane during diwali

தீபாவளி பெயின்ட் அடிப்பதன் நன்மைகள்

வீட்டிற்கு பெயின்ட் அடித்தால் புதிய தோற்றம் மட்டுமே கிடைக்கும் என நினைக்காதீர்கள். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். வீட்டில் நல்ல விஷயங்கள் நடக்க போகிறதை என்பதை வெளிப்படுத்த பெயின்ட் அடிப்பதில் தவறு கிடையாது. வாஸ்துவின்படி பண்டிகை நேரத்தில் பெயின்ட் அடிப்பது பல நன்மைகளை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. வீட்டிற்கு பெயின்ட் அடிக்க பயன்படுத்தும் நிறங்கள் நேர்மறை ஆற்றலை ஈர்த்து வீட்டிற்கு செல்வத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும். எனவே தீபாவளிக்கு பெயின்ட் அடிக்க முடிவெடுத்துவிட்டால் வாஸ்துவின் படி சில நிறங்களை பயன்படுத்தவும்.

மேலும் படிங்க தீபாவளிக்கு வீட்டு வாசலை அலங்கரிக்கும் பிரமாண்ட ரங்கோலிகள்

வெள்ளை நிறம் : வெள்ளை நிறமானது தூய்மை, அமைதி, தீங்கின்மையை குறிக்கிறது. புதிய தொடக்கங்களை குறிக்க வெள்ளை நிறத்தில் வீட்டை பெயின்ட் அடிக்கலாம்.

மஞ்சள் நிறம் : மஞ்சள் நிறம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் குறிக்கிறது. மேலும் அதிர்ஷ்டமும் அடிக்கும்.

ஆரஞ்சு நிறம் : படைப்பாற்றல், வெற்றி மற்றும் உற்சாகத்தை ஆரஞ்சு நிறம் குறிக்கிறது. இது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை ஈர்த்து அதிர்ஷ்டம் அடிக்க உதவும்.

சிவப்பு : விலமை, சக்தி மற்றும் தைரியத்தை குறிக்கும் சிவப்பு மிகவும் சக்திவாய்ந்த நிறமாகும். இது நேர்மறை ஆற்றலை விலகச் செய்யும்.

பச்சை : இயற்கை, பசுமை, வளர்ச்சி, மிகுதியை பச்சை நிறம் குறிக்கும். மேலும் புதிய தொடக்கங்களால் ஆரோக்கியமும் வளமும் பெருகும்.

எனவே தாமதிக்காமல் உடனடியாக வீட்டிற்கு பெயின்ட் அடியுங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]