
மழைக்காலம் வந்தாலே சில உடல் நல பாதிப்புகளும் நம்முடன் சேர்ந்துப் பயணிக்க ஆரம்பித்துவிடும். அதில் முக்கியமான ஒன்றாக உள்ளது சேற்றுப்புண். சாலைகளில் அதிகளவில் தேங்கி நிற்கும் தண்ணீர், சேறு சகதி போன்றவற்றில் அடிக்கடி நடந்துச் செல்லும் போது, வீட்டிலேயே அதிக தண்ணீரில் நின்றபடி துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்றவற்றால் கால்களில் ஏற்படும் அதிக ஈரப்பதத்தால் சேற்றுப்புண் பாதிப்பு ஏற்படுகிறது. அதிக நேரம் சுகாதாரமற்ற இடங்களில் நின்று கொண்டே இருக்கும் போது பாதங்களில் அதிக அழுக்குகள் சேரும் போதும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்காக உள்ள கிரீம்களை உபயோகிகத்தாலும் வீட்டிலேயே சில எளிய சிகிச்சை முறைகளைப் பின்பற்றலாம். இதோ அவற்றில் சில உங்களுக்காக.
மேலும் படிக்க: இருதய ஆரோக்கியம் முதல் உடல் எடை பராமரிப்பு வரை; சிறுதானியங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள்
சேற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டால் எரிச்சல் ஒருபுறம் இருப்பதோடு நடக்க முடியாத அளவிற்கு வலியையும் அனுபவிக்க நேரிடும். இவற்றை சரி செய்ய கிருமி நாசினியான மஞ்சளைப் பயன்படுத்தலாம். சூடான நீரில் முதலில் கால் பாதங்களை நன்கு கழுவிக் கொள்ளவும். பின்னர் மஞ்சளுடன் எண்ணெய் அல்லது கீழா நெல்லி இலைகளைச் சேர்த்து சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவி வரவும்.
மேலும் படிக்க: இதயம் முதல் பல உடல் ஆரோக்கிய நன்மைகளுக்கு கொத்தமல்லி இலைகளை பயன்படுத்தும் வழிகள்
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]