
இன்றைக்கு உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுபவரகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பானது வேலைப்பளு, குடும்பச் சூழல், கடன் சுமை, தனிமை, காதல் தோல்வி என பல காரணங்களால் ஏற்படுகிறது. இவற்றைத் தவிர்க்காவிடில் உடல் நலம் முற்றிலும் பாதிக்கப்படும். இவற்றிற்கு என்ன செய்ய வேண்டும்? அன்றாட வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: அனைத்து வயதினருக்கும் நன்மை அளிக்கும் பாசிப்பருப்பில் இருக்கும் ஊட்டச்சத்து பற்றி பார்க்கலாம்
ஹைப்பர்டென்சன் எனப்படும் உயர் இரத்த அழுத்தம் என்பது இதயத்திற்குச் செல்லக்கூடிய தமனிகளில் இரத்தத்தின் அழுத்தம் தொடர்ந்து அதிகமாய் இருப்பதைக் குறிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக இரத்த ஓட்டம் அதிகமாகும் போது மாரடைப்பு, பக்கவாதம், சீறுநீரக நோய் போன்ற கடுமையான உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் எப்போதும் மன நிம்மதியுடன் இருக்க வேண்டும். எந்தளவிற்கு மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறீர்களோ? அந்தளவிற்கு எவ்வித உடல் நல பாதிப்பும் ஏற்படவில்லை. இதோடு வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அவற்றில் சில டிப்ஸ்கள் உங்களுக்காக.
மேலும் படிக்க: கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? அவசியம் பின்பற்ற வேண்டிய 5 குறிப்புகள்
தினமும் காலை எழுந்தவுடன் முருங்கை இலை சூப் குடிக்கவும். முருங்கை கீரை அல்லது இலைகளை நிறைய தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின்னர் இதனுடன் சிறிய வெங்காயம் மற்றும் வெந்தயத்தைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு அப்படியே அடுப்பில் வைக்கவும்.பின்னர் வடிகட்டி பருகவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. உடலுக்குத் தேவையான கால்சியம், அயர்ன் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு உடல் எடையையும் கணிசமாக குறைக்க உதவும்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]