herzindagi
image

நல்ல தூக்கத்தைப் பெறுவது முதல் உடல் எடையைக் குறைக்க ஜாதிக்காய் போதும்; பயன்படுத்தும் முறை இதோ!

ஜாதிக்காய் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.  
Editorial
Updated:- 2025-10-19, 22:34 IST

நம்மில் பலர் சந்திக்கும் பெரும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது தூக்கமின்மை. என்ன தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும் மனம் நிம்மதி இல்லையென்றால் தூக்கம் வரவே வராது. தூக்கமின்மை எப்போது ஏற்படுகிறதோ? அப்போதே உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டே இருக்கும். இதற்காக பெரியதாக எதையும் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.பார்ப்பதற்கு மிகச்சிறிய அளவில் ஜாதிக்காய் பொடி போதும்.

மேலும் படிக்க: கண் பார்வையை பாதிக்கும் 5 பழக்கங்கள்; இந்த தவறுகளை மட்டும் பண்ணாதீங்க மக்களே


ஆம் ஜாதிக்காயில் உள்ள மிரிஸ்டின் மற்றும் எலிமிசின் உள்ளிட்ட பயோஆக்டிவ் கூறுகள் நமது உடலில் உள்ள நரம்பியல் உற்பத்தி மற்றும் கட்டுப்பாட்டுக்கு பேருதவியாக உள்ளது. எனவே இரவில் எப்போது தூங்கச் சென்றாலும் ஒரு கப் சூடான நீரில் சிறிதளவு ஜாதிக்காய் பொடியை கலந்துக் குடிக்கவும்.

சூடான பாலிலும் சிறிதளவு ஜாதிக்காய் பொடியைக் கலந்துக் குடிக்கலாம். இதில் உள்ள மெக்னீசியம், வைட்டமின் பி6 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாடுகளை சீராக்குகிறது. மேலும் மனதிற்கு ஒருவித அமைதியைக் கொடுக்கும் போது நல்ல தூக்கத்தையும் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

 

உடல் எடையைக் குறைக்கும் ஜாதிக்காய்:

தூக்கமின்மைக்கு அடுத்தப்படியாக பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது உடல் பருமன். குறிப்பாக குழந்தைப் பிறந்த பெண்களுக்கு உடல் அளவில் பல மாற்றங்களைச் சந்திக்க நேரிடும். குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு ஜிம்மிற்கோ? அல்லது வீட்டிலோ? உடற்பயிற்சிகள் செய்வது என்பது மிகவும் சவாலான செயலாக இருக்கும். இந்த நேரத்தில் அதிகரித்த உடல் எடையக் குறைக்க ஜாதிக்காய் சிறந்த தேர்வாக அமையும்.

மேலும் படிக்க: ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஒரு வாரத்தில் உடல் எடையை குறைக்க உதவும் குறிப்புகள்

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி செரிமான அமைப்பை சீராக்குகிறது. உடலில் தேவையில்லாத கழிவுகள் அனைத்தும் வெளியேறுவதால் தொப்பை போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை. இதோடு ஜாதிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]