
நமது சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமான குணம் இருக்கிறது. அதிலும், குறிப்பாக மிளகில் இருக்கும் பல்வேறு நன்மைகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கின்றன. அதன்படி, மிளகியில் இருக்கும் நன்மைகள் குறித்து தற்போது காணலாம்.
மேலும் படிக்க: ஊறவைத்த பூசணி விதைகளில் இவ்வளவு நன்மைகளா? நோட் பண்ணுங்க மக்களே
மிளகு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது கலோரிகளை வேகமாக குறைக்க உதவுவதால், உடல் எடையை நிர்வகிக்கவும், கொழுப்பை குறைக்கவும் துணைபுரிகிறது. மேலும், தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்க மிளகு பயன்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மிளகு மேம்படுத்துகிறது.

சாதாரணமாக ஏற்படக் கூடிய சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மிளகு மருந்தாக செயல்படுகிறது. இது சுவாசக் குழாயில் இருந்து சளியை அகற்றவும், சளி மற்றும் இருமல் அறிகுறிகளை போக்கவும் உதவுகிறது. வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் உற்பத்தியை மிளகு தூண்டுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதற்கும், செரிமான கோளாறுகளை குறைப்பதற்கும் பயன்படுகிறது. இதன் மூலம், சிறந்த குடல் ஆரோக்கியத்தையும் மிளகு ஊக்குவிக்கிறது.
மேலும் படிக்க: கை நடுக்கம் அதிகமாக இருக்கிறதா? வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்; அலட்சியப்படுத்த வேண்டாம்
மிளகு, இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இது ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கின்றன. இதனால், பொலிவான சருமத்தை பெற முடியும்.

மிளகில் உள்ள பைபரின் (piperine) என்ற கலவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும், நினைவாற்றலை அதிகரிப்பதாகவும், கூறப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் மிளகில் காணப்படுகிறது. இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு கலவைகள், உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. இது மூட்டுவலி போன்ற நிலைகளின் அறிகுறிகளை குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகை, நாள்தோறும் நமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதன் பலன்களை பெற முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]