
பெண்கள் என்றாலே எப்போதும் தனி அழகு தான். இவர்களை மேலும் அழகாக்க ஆடைகள், அணிகலன்கள் என பல அழகு சாதனப் பொருட்கள் கடைகளில் விதவிதமாக விற்பனையாகிறது. ஆனாலும் பெண்களை மேலும் அழகாகக் காட்டுவது அவர்களின் கூந்தல். ஆம் கார்கூந்தல் பெண்ணழகு என்பதற்கு ஏற்றார்போல் தலைமுடி நீளமாகவோ அல்லது குறைவாக இருந்தாலும் எப்படி அதைப் பராமரிக்கிறோம்? என்பதைப் பொறுத்து தான் அமையும். இனி நீங்களும் உங்களது கூந்தலை அடர்த்தியாகவும்? வேகமாகவும் வளர செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களது வீட்டில் ஒருமுறையாவது ஊற வைத்த வெந்தயம் மற்றும் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் போன்று உபயோகித்துப் பாருங்கள். எப்படி செய்ய வேண்டும்? இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எப்படி தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: பல முயற்சிகளுக்கு பிறகு இறந்த சருமத்தை அகற்ற முடியவில்லை என்றால், இதோ சிறந்த வழிகள்
வெங்காயத்தில் உள்ள சல்பர் கொலாஜனை அதிகரிக்கச் செய்வதோடு, தலையில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதனால் தலைமுடியின் வளர்ச்சியும் சீராகிறது. இதோடு வெந்தயத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான போலிக் அமிலம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்றவை தலைமுடியின் வேரிலிருந்து நுனி வரை வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதே போன்று வெங்காயத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் தலையில் பொடுகு, அரிப்பு போன்ற எவ்வித பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. இதனால் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளின்றி கூந்தல் வேகமான வளர்ச்சி அடைகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]